ரஜினி to சிவாஜி - விஜய்சேதுபதியின் புது ரூட்!

ரஜினி to சிவாஜி - விஜய்சேதுபதியின் புது ரூட்!

செய்திகள் 30-Dec-2015 11:14 AM IST Top 10 கருத்துக்கள்

பல படங்களை கையில் வைத்துக் கொண்டு பிசியாக நடித்து வரும் விஜய் சேதுபதி 'காக்கா முட்டை' மணிகண்டன் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற தகவலை ஏற்கெனவே நமது இணைதளத்தில் வெளியிட்டிருந்தோம். அந்த படத்திற்கு 'ஆண்டவன் கட்டளை' எனப் பெயரிட்டு இருக்கிறார்கள். ஏற்கெனவே ரஜினி நடித்த படங்களின் தலைப்பை மீண்டும் சூட்டப்பட்டு படங்கள் தயாராகி வரும் நிலையில் இப்போது சிவாஜி நடித்த படங்களின் பெயர்களும் புதிய படங்களுக்கு சூட்டி வருகிறார்கள். 1964-ல் கே.சங்கர் இயக்கத்தில் சிவாஜி நடித்த படம் ‘ஆண்டவன் கட்டளை’.

சீனு ராமசாமி இயக்கத்தில் ரஜினி நடித்த ‘தர்மதுரை’ படத்தலைப்பில் நடித்து வரும் விஜய் சேதபதி அடுத்து சிவாஜியின் ‘ஆண்டவன் கட்டளை’ தலைப்பை கொண்ட படத்திலும் நடிப்பதால் அவர் ஒரு புது ரூட்டில் பயணிக்கிறார் என்று சொல்லலாம். இந்த ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் பேசப்பட்ட படம் ‘காக்கா முட்டை’. இந்த படத்தை தொடர்ந்து மணிகண்டன் இயக்கியிருக்கும் படம் ‘குற்றமே தண்டனை’. விதார்த், ஐஸ்வர்யா உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது. ‘குற்றமே தண்டனை’ படத்தை தொடர்ந்து விஜய்சேதுபதி நாயகனாக நடிக்கும் ‘ஆண்டவன் கட்டளை’ படத்தை இயக்கவிருக்கிறார் மணிகண்டன். இப்படத்தை அன்புசெழியன் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு புத்தாண்டில் தொடங்க இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;