சர்வதேச திரைப்பட விழாவில் மாயா, 36 வயதினிலே!

சர்வதேச திரைப்பட விழாவில் மாயா, 36 வயதினிலே!

செய்திகள் 30-Dec-2015 9:53 AM IST VRC கருத்துக்கள்

சென்னையில் வருடந்தோறும் சர்வதேச திரைப்பட விழா நடப்பது வழக்கம்! இம்மாதம் நடைபெறவிருந்த 13-ஆவது சர்வதேச திரைப்பட விழா சென்னையில் சமீபத்தில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தால் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான விழா வருகிற ஜனவரி 6-ஆம் தேதி துவங்கி, 13-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இவ்விழாவில் திரையிடப்படுவதற்கு பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நயன்தாரா நடித்து, அஸ்வின் சரவணன் இயக்கிய ‘மாயா’, சூர்யாவின் ‘2டி என்டர்டெயின்மென்ட் நிறுவன தயாரிப்பில் ஜோதிகா நடித்து, ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கிய ‘36 வயதினிலே’ மற்றும் ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’, ‘சார்லஸ் ஷஃபீக் கார்த்திகா’, ‘கிருமி’, ‘கோடைமழை’, ‘ஆரஞ்சு மிட்டாய்’, ‘ஓட்டதூதுவன்-1854’, ‘பிசாசு’, ‘ரேடியோபெட்டி’, ‘தாக்க தாக்க’, ‘தனி ஒருவன்’ ஆகிய 12 தமிழ் படங்கள் தேர்வாகியுள்ளது.

மேலும், உலக அளவில் மிகச்சிறந்த 120 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. சினிமா விருதுகளில் மிக உயர்ந்த விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 16 படங்களும், கேன்ஸ் திரைப்பட விழாவில் விருதுகளைப் பெற்ற சில படங்களும் இவ்விழாவில் திரையிடப்பட உள்ளன.

அத்துடன் இந்த திரைப்படவிழாவில் மறைந்த இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர், நடிகை ‘ஆச்சி’ மனோரமா ஆகிய இருவருக்கும் அஞ்சலி செலுத்தும் விதமாக 'அச்சமில்லை அச்சமில்லை', 'அக்னி சாட்சி', 'ஒரு வீடு இரு வாசல்', 'உன்னால் முடியும் தம்பி', 'சிந்து பைரவி', 'மேஜர் சந்திரகாந்த்' 'அவள் ஒரு தொடர்கதை' என 7 படங்கள் திரையிடப்பட உள்ளன.
இதனை விழாக் குழுவினர் நேற்று மாலை சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

உறியடி 2 - டீஸர்


;