2016-ல் சாதனை படைக்க காத்திருக்கும் விஜய்சேதுபதி!

2016-ல் சாதனை படைக்க காத்திருக்கும் விஜய்சேதுபதி!

செய்திகள் 29-Dec-2015 12:35 PM IST VRC கருத்துக்கள்

பெரும்பாலான முன்னணி ஹீரோக்களும் ஒரு படத்தில் நடித்து முடித்த பிறகு தான் அடுத்த படத்திற்குப் போவார்கள்! ஆனால் இந்த விஷயத்தில் விஜய்சேதுபதி மாறுபட்டவர்! ஒரே நேரத்தில் பல படங்களில் நடிப்பார். அந்த வகையில் விஜய்சேதுபதி கைவசம் இப்போது 7 படங்கள் இருக்கின்றன. இதில் சீனுராமசாமி இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் ‘இடம் பொருள் ஏவல்’ அனைத்து வேலைகளும் முடிவடைந்துள்ள நிலையில் இன்னமும் ரிலீசாகாமல் இருக்கிறது. இந்த படம் தவிர ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் ‘மெல்லிசை, கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் ‘இறைவி’, நலன் குமாரசாமி இயக்கும் ‘காதலும் கடந்து போகும்’ அருண்குமார் இயக்கும் ‘சேதுபதி’ ஆகிய படங்களின் வேலைகளும் இறுதிகட்டத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படங்கள் தவிர, சீனுராமி இயக்கும் ‘தர்மதுரை’ படத்திலும் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி! இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் அருண் விஜய் நடிப்பில் ‘வா டீல்’ படத்தை இயக்கியிருக்கும் சிவஞானம் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் விஜய் சேதுபதி என்று கூறப்படுகிறது. ஆக, விஜய்சேதுபதி கைவசம் இப்போது 7 படங்கள் இருக்கின்றன. இப்படங்கள் அடுத்த வருடம் வரிசையாக ரிலீசானாலே அடுத்த ஆண்டில் அதிக படங்களில் நடித்த ஹீரோ என்ற பெருமை விஜய் சேதுபதிக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;