தொடரட்டும் சித்தார்த்தின் மனிதநேயப் பணி!

தொடரட்டும் சித்தார்த்தின் மனிதநேயப் பணி!

செய்திகள் 29-Dec-2015 12:10 PM IST VRC கருத்துக்கள்

சென்னயில் சில வாரங்களுக்கு முன் பெய்த கன மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் பெரும் பங்கு வகித்தார்கள் நடிகர் சித்தார்த்தும், ஆர்.ஜே.பாலாஜியும். வெள்ளம் பாதித்த பகுதிகளில் நேரடியாக களத்தில் இறங்கி பணியாற்றிய இவர்களுடன் மேலும் பல தன்னார்வலர்கள் கை கோர்த்து வெள்ள நிவாரணப் பணிகளை செய்தனர். அத்துடன் எல்லோரும் ஒருங்கிணைந்து செயல்பட வசதியாக இந்த அமைப்புக்கு ‘சென்னை மைக்ரோ’ என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த அமைப்பினரின் மனித நேய பணிகளை கண்டு, இந்த அமைப்பின் மூலம் தங்களால் இயன்ற உதவிகளை செய்ய நிறைய பேர் முன் வந்தனர். அதன்படி தமிழகத்தின் பிறப் பகுதிகளிலிருந்து மட்டுமல்லாமல் பக்கத்து மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலிருந்தும் மக்களின் அடிப்படை தேவைக்கான பொருட்கள், பணம் வந்து குவிந்தது! இது மட்டுமல்லாமல் வெளிநாட்டு வாழ் இந்தியர்களும் நிறைய நிதி உதவிகளை செய்தனர்.
இப்படி வந்து குவிந்த நிவாரண பொருட்களை எந்தெந்த ஏரியாவில் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை கண்டறிந்து அவர்களுக்கு உரிய முறையில் அந்த பொருட்கள் விநியோகிக்கப்பட்டது. அத்துடன் மக்களுக்கு உதவும் வகையில் உலகெங்கிலும் இருந்து, இந்த அமைப்புக்கு வந்த நிதி மொத்தம் 3,39,18,793 ரூபாய்! இந்த நிதியை தமிழகத்தில் சீரமைப்புக்காக அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களில், இல்லங்களில் வசிப்போரின் மறுவாழ்வுக்காக பகிர்ந்து அளிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார் நடிகர் சித்தார்த்!

இப்படி கடந்த சில வாரங்களகாக தொடர்ந்து மனிதநேய பணிகளில் ஈடுப்பட்டு வரும் சித்தார்த் மற்றும் அவரது குழுவினரை தமிழக மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்! தொடரட்டும் அவர்களது மனிதநேயப் பணி!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கீ - டிரைலர்


;