வேதாளம் - 50 நாட்அவுட்!

வேதாளம் - 50 நாட்அவுட்!

செய்திகள் 29-Dec-2015 10:21 AM IST Chandru கருத்துக்கள்

இந்த வருடம் அஜித் ரசிகர்களுக்கு உண்மையான ‘தல’ தீபாவளிதான். சிவா இயக்கத்தில் அஜித் நடித்து தீபாவளியன்று திரைக்கு வந்தது வேதாளம். இப்படத்தின் டிரைலர்கூட ரிலீஸ் செய்யப்படவில்லை. ஆனாலும் தியேட்டரில் முதல் வாரத்தில் ரசிகர்கள் கூட்டம் திருவிழாபோல் திரண்டு வந்தது. முதல் நாள் வசூலில் இப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் புதிய சாதனையை படைத்தது என்றுகூட சொல்லலாம். அஜித்தின் நெகட்டிவ் ஷேட் கேரக்டரும், பவர்ஃபுல் பஞ்ச் டயலாக்கும் தல ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. அஜித் கேரியரிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனை ‘மங்காத்தா’ வசம் இருந்தது. மங்காத்தாவையும் வசூலில் மிஞ்சி முதலிடத்தைப் பிடித்தது வேதாளம்.

இன்றோடு (டிசம்பர் 29) ‘வேதாளம்’ வெளியாகி 50வது நாளை எட்டியுள்ளது. வேதாளத்திற்குப் பிறகு பல படங்கள் வெளியானபோதும்கூட, இன்னும் சில திரையரங்குகளில் இப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது என்பதே இப்படத்தின் வெற்றியைப் பறைசாற்றும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹீரோ டீஸர்


;