சுற்றுச்சூழல் பாதுகாப்பு - அழைக்கிறார் சூர்யா!

சுற்றுச்சூழல் பாதுகாப்பு - அழைக்கிறார் சூர்யா!

செய்திகள் 28-Dec-2015 2:47 PM IST VRC கருத்துக்கள்

தமிழகத்தில் சமீபத்தில் பெய்த கன மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்தனர். அத்துடன் வெள்ளம் பாதிக்கப்பட்ட் பகுதிகளுக்கும் நேரடியாக சென்று பல உதவிகளை புரிந்தனர். இந்த விஷயத்தில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி முதலானோர் சார்பாக முதலமைச்சரின் வெள்ள நிவாரண நிதிக்காக 25 லட்சம் ரூபாய் வழங்கியதோடு, இவர்கள் நிர்வகித்து வரும் ‘அகரம் ஃபவுண்டேஷன்’ மூலமாகவும் நிறைய உதவிகள் செய்யப்பட்டன.

எதிர்பாராமல் ஏற்பட்ட இந்த மழை வெள்ளத்தால் சென்னை மட்டுமல்லாமல் தமிழகமே நிலைகுலைந்து போனது. தமிழகத்தில் ஏற்பட்ட இந்த வெள்ளம் நமக்கு, மனித நேயம் என்றால் என்ன, ஒற்றுமை என்றால் என்ன என்பதை போன்ற பல விஷயங்களை உணர்த்தியது. எல்லோரும் ஒன்று சேர்ந்ததன் பலனை நம்மால் உணர முடிந்தது. இதுபோன்ற ஒரு துயரம் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு நடிகர் சூர்யா ஒரு கருத்தரங்கை நடத்த ஏற்பாடு செய்துள்ளார். ‘யாதும் ஊரே’ என்ற பெயரில் நடைபெறவிருக்கும் இந்த கருத்தரங்கில் வெள்ள நிவாரண பணிகளில் களத்தில் இறங்கி பணியாற்றிய அத்தனை பேரையும் ஒருங்கிணைத்து சுற்று சூழல் பாதுகாப்பு, நீர் நிலைகள் பராமரிப்பு குறித்து விவாதிக்க உள்ளனர். இந்த கருத்தரங்கு சென்னையில் வருகிற ஜனவரி 2, 3 தேதிகளில் நடைபெறவிருக்கிறது. சமூக அக்கரை உள்ள அனைவரும் இதில கலந்துகொள்ளலாம் என்று நடிகர் சூர்யா அழைப்பு விடுத்துள்ளார். இந்த முயற்சியில் சூர்யாவின் அகரம் ஃபவுண்டேஷன், புதிய தலைமுறை, இந்து பத்திரிகை ஆகியவை பெரும் பங்காற்றவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;