சுசீந்திரன் உதவியாளரை பாராட்டிய விஜய்சேதுபதி!

சுசீந்திரன் உதவியாளரை பாராட்டிய விஜய்சேதுபதி!

செய்திகள் 28-Dec-2015 1:27 PM IST VRC கருத்துக்கள்

‘ரால்ஃப் புரொடக்‌ஷன்ஸ்’ என்ற புதிய படநிறுவனம் தயாரித்திருக்கும் படம் ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’. சுசீந்திரனிடம் உதவியாளராக இருந்த நாகராஜன் இயக்கியுள்ள இப்படத்தில் புதுமுகம் ரிஜின் சுரேஷ் கதாநாயகனாக நடிக்க, ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தில் கதாநாயகியாக நடித்த அர்ஷிதா, ரிஜினுக்கு ஜோடியாக நடித்துள்ளார். ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ படத்திற்கு இசை அமைத்த ரஜின் மகாதேவ் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று காலை நடந்தது. இவ்விழாவில் படத்தின் ஆடியோவை நடிகர் விஜய்சேதுபதி வெளியிட, இயக்குனர்கள் சுசீந்திரன், திரு ஆகியோர் பெற்றுக் கொண்டனர். பிறகு விஜய் சேதுபதி பேசும்போது,

‘‘இப்படத்தை இயக்கியிருக்கும் நாகராஜை கடந்த ஐந்து ஆண்டுகளாக தெரியும். ரொம்பவும் சுறுசுறுப்பான, நல்ல சிந்தனையுள்ள இளைஞர். எனக்காக கூட ஒரு கதையை சொன்னார். ஆனால் அப்போது என்னால் அந்த கதையில் நடிக்க முடியவில்லை. இப்படத்தின் டிரைலரையும், பாடல்களையும் பார்த்தபோது இப்படம் நிச்சயமாக வெற்றிபெரும் என்பதை உணர்ந்தேன். இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள ரிஜின் சுரேஷ், சிரித்தபடியே வருகிறார். அதை பார்க்கும்போதும் சந்தோஷமாக இருந்தது. என் கூட ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தில் நடித்த அர்ஷிதா இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தில் நடித்ததை விட இப்படத்தின் டைட்டிலுக்கு ஏற்ற மாதிரி அர்ஷிதா அழகாக, சிறப்பாக நடித்துள்ளார். இப்படத்தை இயக்கியிருக்கும் நாகராஜன் உட்பட படக் குழுவினர் அனைவருக்கும் என் பாராட்டுக்கள்’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சுட்டுப்புடிக்க உத்தரவு டீஸர்


;