ஒரு வருட இடைவெளியில் 2 ரஜினி படங்கள்!

ஒரு வருட இடைவெளியில் 2 ரஜினி படங்கள்!

செய்திகள் 28-Dec-2015 11:59 AM IST Chandru கருத்துக்கள்

ஒரு கட்டத்திற்குப் பிறகு, இரண்டு வருடத்திற்கு அல்லது மூன்று வருடத்திற்கு ஒரு படத்தில் மட்டுமே நடித்துக் கொண்டிருந்தார் ரஜினி. ஆனால், இப்போது ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கிறார். இது சூப்பர்ஸ்டார் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் கடந்த 2 மாதங்களாக பரபரப்பாக நடைபெற்று வந்தன். அது ஒருபுறம் வளர்ந்து கொண்டிருக்க, இன்னொருபுறம் ஷங்கர் இயக்கத்தில் எந்திரனின் 2ஆம் பாகமான ‘2.0’ படத்தையும் துவங்கிவிட்டார்கள்.

‘கபாலி’யின் படப்பிடிப்பு வேலைகளை விறுவிறுவென முடித்துவிட்டு, ஏப்ரலுக்குப் பிறகு ‘2.0’ படத்தில் முழுமூச்சில் நடிக்கவிருக்கிறாராம் ரஜினி. அதேபோல் ‘கபாலி’யை 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் தேதியும், ‘2.0’ படத்தை 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதியும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்களாம். ஒரு வருட இடைவெளியிலேயே அடுத்தடுத்து ரஜினியின் இரண்டு படங்கள் வரவிருப்பதால் திரையுலகில் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;