‘தெறி’ அடுத்தகட்ட படப்பிடிப்பு எப்போது?

‘தெறி’ அடுத்தகட்ட படப்பிடிப்பு எப்போது?

செய்திகள் 28-Dec-2015 11:37 AM IST Chandru கருத்துக்கள்

சமீபத்தில் ‘தெறி’ படத்திற்காக சண்டைக்காட்சி ஒன்றை தொடர்ந்து 40 மணி நேரம் படமாக்கினார்கள். கயிறில் தொங்கியபடி விஜய் நடித்த இந்த சண்டைக்காட்சிக்காக தொழிற்சாலை செட் அமைத்து படமாக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்களை முன்னிட்டு தற்காலிக பிரேக் கொடுத்திருக்கிறார்கள். மீண்டும் ஜனவரி 3ஆம் தேதி ‘தெறி’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு துவங்கவிருக்கிறதாம். இந்த இறுதிக்கட்ட படப்பிடிப்பை தொடர்ச்சியாக 3 வாரங்கள் நடத்தத் திட்டமிட்டிருக்கிறாராம் அட்லி. அதன்பிறகு பிப்ரவரியில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் துவங்குமாம்.

ஜி.வி. இசையமைக்கும் 50வது படமான ‘தெறி’ படத்தின் பாடல்கள் மார்ச்சில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14ஆம் தேதி ‘தெறி’ படம் திரையரங்குகளில் ரிலீஸாகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;