‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்திற்குப் பிறகு, எம்.ராஜேஷ் இயக்கத்தில் ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தில் நடிக்கவிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக இரண்டு நாயகிகளை ஒப்பந்தம் செய்துள்ளனராம். ஒருவர் ப்ரியா ஆனந்த்... ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தில் சிறப்புத்தோற்றத்தில் நடித்த ப்ரியா ஆனந்த் இப்படத்திலும் நடிக்கிறார். இன்னொருவர் கீர்த்தி சுரேஷ். விக்ரம் பிரபு, சிவகார்த்திகேயன், தனுஷ் ஆகியோரைத் தொடர்ந்து முதல்முறையாக ஜி.வி.பிரகாஷுடன் இணைகிறார் கீர்த்தி.
படத்தின் முக்கியமான ஒரு வேடத்தில் நடிக்க பிரகாஷ் ராஜும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள். முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து உருவாகவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஜனவரி இறுதியில் ஆரம்பமாகும் என்று தெரிகிறது. தற்போது, ‘டார்லிங்’ சாம் ஆண்டன் இயக்கத்தில் ஆனந்தியுடன் புதிய படமொன்றில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஜி.வி.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறாக உருவாகி வரும் படம் ‘தலைவி’. ஏ.எல்.விஜய் இயக்கி...
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இந்த படத்தின் பாடல் ஒன்ற சமீபத்தில்...
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பு...