‘பூலோகம்’ படத்தை தொடர்ந்து ‘ஜெயம்’ ரவி நடிப்பில் வெளியாகவிருக்கிற படம் ‘மிருதன்’. தமிழ் சினிமாவின் முதல் ஜாம்பி (zombie) ரக படமான இப்படத்தை சக்தி சௌந்தர் ராஜன் இயக்கியுள்ளார். இப்படத்தில் ‘ஜெயம்’ ரவியுடன் முதன் முதலாக ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் லட்சுமி மேன்ன். சமீபத்தில் இப்படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்யவிருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருந்தார்கள்! ஆனால் இப்போது ‘மிருதன்’ படத்தின் ரிலீஸை தள்ளி வைத்திருக்கிறார்கள். காரணம், பட வேலைகள் இன்னும் மிச்சமிருக்கிறதாம்! அத்துடன் பொங்கலுக்கு பாலாவின் ‘தாரை தப்பட்டை’, சிவகார்த்திகேயனின் ‘ரஜினி முருகன்’, விஷாலின் ‘கதகளி’, உதயநிதி ஸ்டாலினின் ‘கெத்து’ ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் ‘மிருதன்’ படத்தை கொஞ்சம் தள்ளி ரிலீஸ் செய்யலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்களாம். ஆனால் ரசிகர்களுக்கு புத்தாண்டு பரிசாக ‘மிருதன்’ படத்தின் டிரைலரை வருகிற 31-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.
‘குளோபல் இன்ஃபோடெயின்மென்ட்’ நிறுவனம் சார்பில் மைக்கேல் ராயப்பன் தயாரித்து வரும் ‘மிருதன்’ படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறார். ‘ரோமியோ ஜூலியட்’, ‘தனி ஒருவன்’, ‘பூலோகம்’ என வரிசையாக வெற்றிப் படங்களை வழங்கிய ‘ஜெயம்’ ரவியின் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் படம், ‘நாய்கள் ஜாக்கிரதை’ வெற்றிப் படத்தை தொடர்ந்து சக்தி சௌந்தர் ராஜன் இயக்கியுள்ள படம், தமிழ் சினிமாவின் முதல் ஜாம்பி ரக படம் என பல சிறப்புக்களோடு விரைவில் வெளியாகவிருக்கிறது ‘மிருதன்’.
மணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து...
மணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில்...
வாமனன்’, ‘என்றென்றும் புன்னகை’, ‘மனிதன்’ ஆகிய படங்களை இயக்கிய அஹமத், ‘ஜெயம்’ ரவியை வைத்து ஒரு படத்தை...