‘ஜெயம்’ ரவியின் அடுத்த படம்?

‘ஜெயம்’ ரவியின் அடுத்த  படம்?

செய்திகள் 28-Dec-2015 9:48 AM IST VRC கருத்துக்கள்

‘ஜெயம்’ ரவி நடிப்பில் இந்த வருடம் ‘ரோமியோ ஜூலியட்’, ‘சகலகலாவல்லவன்’ (அப்பா டக்கர்) , ‘தனி ஒருவன்’, ‘பூலோகம்’ என நான்கு படங்கள் ரிலீசானது. இதில் ‘சகலகலாவல்லவன்’ தவிர மற்ற 3 படங்களும் பெரும் வெற்றிப் படங்களாக அமைந்தன! இதையொட்டி ‘ஜெயம்’ ரவி நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது ‘ஜெயம்’ ரவி பேசும்போது,

‘‘என்னுடைய இந்த வெற்றியில் பத்திரிகையாளர்களாகிய உங்களுக்கும் பெரிய பங்கு இருக்கிறது. என்னைப் பொறுத்த வரையில் ‘அப்பாடக்கரு’ம் மிக முக்கியமான படம் தான். எனது அப்பா அடிக்கடி சொல்லுவார்! கடினமான, நேர்மையான உழைப்பு எப்போதும் வீண் போகாது என்று! ‘பூலோகம்’ படத்திற்கு நான் உழைத்தது மாதிரி வேறு எந்த படத்திற்கும் உழைத்திருக்க மாட்டேன்! பல பிரச்சனைகளை சந்தித்து இப்படம் வெளியாகியிருக்கிறது. தற்போது இப்படத்திற்கு ரசிகர்கள் தந்துள்ள ஆதரவை பார்க்கும்போது அந்த வலிகளெல்லாம் மறந்து விட்டது.

அடுத்து எனது நடிப்பில் ‘மிருதன்’ வெளியாகவிருக்கிறது. இப்படத்தோட ரிலீஸ் தேதி இன்னும் முடிவாகவில்லை. இப்படமும் எனது கேரியரில் ஒரு மிக முக்கியமான படமாக இருக்கும். அடுத்ததாக ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை இயக்கிய லக்‌ஷமன் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறேன். இப்படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது. ‘தனி ஒருவன்’ படத்தை தொடர்ந்து நான் கௌதம் மேனன் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக, ஏ.எல்.விஜய் படத்தில் நடிப்பதாக, சுசீந்தரன் இயக்கும் படத்தில் நடிக்கவிருப்பதாக... இப்படி பல செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இவர்கள் மூவரும் என்னை சந்தித்து பேசியது உண்மை தான்! ஆனால் எதுவும் முடிவாகவில்லை. என்னை பொறுத்த வரையில் அடுத்து வெளியாகவிருக்கிற படம் ‘மிருதன்’. அதற்கடுத்து லக்‌ஷமன் இயக்கும் படம். இப்போதைக்கு இது தான் என்னுடைய புராஜெக்டஸ்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கோமாளி ட்ரைலர்


;