சென்னையில் இருந்து இயங்கும் HeroTalkies.com , வெளிநாட்டு வாழ் தமிழ் மக்களுக்காக,தமிழ் திரைபடங்களை இணைய உரிமை பெற்று நேர்மையான முறையில் இணையம் மூலம் வழங்கி வருகின்றனர். இந்நிறுவனம் நடிகர் சூரியாவின் 2D Entertainment நிறுவனம், மற்றும் இதர முதலீட்டாளர்கள் சஞ்சய் அர்ஜுன்தாஸ் வாத்வா (முன்னணிதிரைப்படவிநியோகஸ்தர்), வெளிநாட்டு வாழ் இந்தியர்களான பாலாஜி பஞ்சபகேசன்(UK), ஷங்கர் வெங்கடேசன்(Poland), மற்றும் வசிகரன் வெங்கடேசன் (USA)இருந்து தங்களின் முதல் சுற்று முதலீட்டை பெற்றுள்ளனர்.
2014ல் தொடங்கப்பட்ட 2D Entertainment நிறுவனம், 36 வயதினிலே, பசங்க2 போன்ற தரமான படங்களை தயாரித்துள்ளது. மேலும் அடுத்து சூரியா நடித்து கொண்டிருக்கும் பிரமாண்ட படமான “24” படத்தைதயாரித்துக் கொண்டிருக்கிறது. “ஒரு முன்னோக்குப் பார்வையோடு இயங்கும் நிறுவனமாக, நாங்கள் வெவ்வேறு முயற்சிகளுடன் இந்த பொழுதுபோக்கு துறையில் எங்களது வளர்ச்சியை மேம்படுத்த விளைகிறோம், அதன்வழியாகவேஇந்தமுயற்சியில் நாங்கள் முதலீடுசெயுதுள்ளோம்”.எனஇந்நிறுவனத்தின்தலைமை நிர்வாக அதிகாரிதிருராஜசேகர்பாண்டியன் கூறியுள்ளார்.
“நானும் என் சகோதரன் ஆதியும்மிகுந்த ஆவலுடன் எங்கள் முதலீட்டாளர்களுடன்இணைந்து செயல்பட காத்துக் கொண்டிருக்கிறோம். திரு சூரியா போன்ற முன்னணி நடிகர் இதில் விருப்பம் காட்டியது, எங்களை சிறந்த முறையில் ஊக்குவிப்பதாகஇருக்கிறது” எனஇணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான பிரதீப் அவர்கள்தெரிவித்தார்.
இந்த முதலீட்டில் பெரும் பங்கினை திரைப்படங்கள் மற்றும்வாடிக்கையாளர் கையகப்படுத்தலில் பயன்படுத்த முடிவு எடுக்கப்பட்டுஇருகின்றது. திரைபடங்கள் விநியோகம் செய்யஒரு தரமான மாற்று வழியினை கொண்டு வந்து. Piracy ஒழிக்கும் இந்நிறுவனத்தின் நோக்கத்தில், இது பெரும்வாரியாக உதவும்.
HeroTalkiesபற்றி
Herotalkies.com பிரதீப் மற்றும் ஆதித்தியன் அவர்களால் 2014ல் தொடங்கப்பட்டது. திரைப்படங்களை இணையம் வழியாக விநியோகம் செய்வதில் ஒரு சிறந்த மாற்று முறையினை கொண்டுவந்தது.
திரைப்படதயாரிப்பளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கும் மக்களுக்கும் இடையே ஒரு தொடர்பினை கொண்டுவந்து, திருட்டு விசிடி மற்றும் இணையதளங்களால் வரும் பிரச்சனைகளை தீர்க்க விளைகிறது. திரைக்கு வரும் திரைப்படங்களை இரண்டு அல்லது ஐந்து வாரங்களுக்குள் தங்களின்இணையத்தில், வெளிநாட்டுவாழ் மக்களுகாக வெளியிடுவது இவர்களின் முக்கிய அம்சமாகும். நிறுவனம் ஆரம்பித்த சிறிய காலத்திலே, ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து, பல ஆயிரம் வாடிக்கையாளர்கள் சேர்ந்துள்ளனர்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூரரைப் போற்று’ படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது....
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இந்த படத்தின் பாடல் ஒன்ற சமீபத்தில்...
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பு...