முன்னாள் நடிகர் சங்க நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டு!

முன்னாள் நடிகர் சங்க நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டு!

செய்திகள் 26-Dec-2015 4:45 PM IST VRC கருத்துக்கள்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூன்றாவது செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நடிகர் சங்க தலைவர் நாசர், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கிப் பேசினர். அப்போது அவர்கள் கூறுகையில்,

‘‘ நடிகர் சங்கத்தில் புதிய நிர்வாகிகள் பொறுப்பு ஏற்கும் வரையில் பொறுப்பில் இருந்த நிர்வாகிகள் கடந்த 2 வருடத்துக்கான நடிகர் சங்க கணக்கு விபரங்களை முழுமையாக இன்னும் ஒப்படைக்கப்படவில்லை. அதைப் போலவே நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக எஸ்.பி.ஐ.சினிமாஸுடன் இதற்கு முன் இருந்த நிர்வாகிகள் போடப்பட்ட ஒப்பந்தம், இன்னும் ரத்து செய்யப்படவில்லை. அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதற்கான பேச்சு வார்த்தைகள் இன்னமும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் நடத்தி வருகிறார்கள். அந்த பேச்சு வார்த்தை இன்னும் ஓரிரு நாட்களில் முடிந்து விடும். அதன் பிறகு நடிகர் சங்கத்திற்கான புதிய கட்டடம் கட்டுவதற்கான வேலைகள் ஆரம்பமாகும். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கான நடிகர் சங்க கணக்குகளை அப்போதிருந்த நிர்வாகிகள் அளிக்க இன்னும் தவறுமானால் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும் நடிகர் சங்கம் ஆலோசித்து வருகிறது’’ என்றனர்.

தமிழகம் முழுக்க சர்ச்சை ஏற்படுத்தியுள்ள சிம்புவின் பீப் பாடல் குறித்து நடிகர் சங்க நிர்வாகிகள் பேசும்போது,

‘‘நடிகர் சிம்புவின் ‘பீப் பாடல்’ குறித்த சர்ச்சையில் நடிகர் சங்கம் ஏற்கெனவே ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. பீப் பாடல் குறித்து வருத்தம் தெரிவிக்க அவர்களிடம் சொன்னோம். ஆனால் சிம்பு தரப்பில் அந்த பிரச்சனையை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்ளவிருப்பதாக சொன்னதால் நடிகர் சங்கம் என்ன செய்ய முடியும்? என்றும் தெரிவித்தனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மரண மட்ட padal


;