மனைவியை பாராட்டிய செல்வராகவன்

மனைவியை பாராட்டிய செல்வராகவன்

செய்திகள் 26-Dec-2015 2:16 PM IST VRC கருத்துக்கள்

இயக்குனர் செல்வராகவன் கதை, திரைக்கதை எழுதி அவரது மனைவி கீதாஞ்சலி செல்வராகவன் முதன் முதலாக இயக்கியுள்ள படம் ‘மாலை நேரத்து மயக்கம்’. செல்வராகவனின் நெருங்கிய நண்பரும், திரைப்பட தொகுப்பாளருமான கோலா பாஸ்கர் தயாரித்திருக்கும் இப்படத்தில் அவரது மகன் கோலா பாலகிருஷ்ணன் ஹீரோவாக நடிக்க, வாமிகா ஹீரோயினாக நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு ஆணுக்கும், ஒரு பெண்ணுக்கு இடையில் ஏற்படும் போல்டான, அதே நேரம் சென்சிட்டிவான ஒரு விஷயத்தை இப்படத்தில் கையாளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வருகிற ஜனவரி 1-ஆம் தேதி வெளியாகவிருக்கிற இப்படம் குறித்து செல்வராகவன் பேசும்போது,

‘‘இப்படத்தின் மூலம் என் மனைவி கீதாஞ்சலி உட்பட நிறைய புதுமுகங்கள் அறிமுகமாகவிருக்கிறார்கள். சொந்தமாக ஒரு படத்தை இயக்க வேண்டும் என்பது கீதாஞ்சலியின் நீண்ட நாள் ஆசையாக இருந்து வந்தது. அவருக்கு அதற்கான திறமை இருக்கிறது என்பதை உணர்ந்ததால் தான் நான் இந்த ஸ்கிரிப்ட்டை அவரிடம் வழங்கினேன். இதுவரையிலும் நான் வேறு ஒருவருக்கு என் ஸ்க்ரிப்டை கொடுத்ததில்லை. ஆனால் நான் எதிர்பார்த்ததை விட இப்படத்தை கீதாஞ்சலி அழகாக இயக்கியுள்ளார். சில போல்டான, சென்சிட்டிவான விஷயங்களை பெண்களாலும் இயக்க முடியும் என்பதை இப்படம் மூலம் நிரூபத்துள்ளார் கீதாஞ்சலி! அதை நீங்கள் படத்தை பார்க்கும்போது உணர்வீர்கள். இந்த படக்குழுவினருக்கு என் பாராட்டுக்கள்’’ என்றார் செல்வராகவன்.

இப்படத்தை தமிழகம் முழுக்க ‘வால்மார்ட் ஃபிலிம்ஸ்’ சாய் 250 தியேட்டர்களுக்கும் மேல் ரிலீஸ் செய்யவிருக்கிறார். செங்கல்பட்டு ஏரியா விநியோகஸ்தரான சாய், முதன் முதலாக இப்படத்தை தமிழகம் முழுக்க வெளியிடவிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காளி முதல் 7 நிமிடங்கள்


;