பிரசாந்த் 4 மொழிகளில் நடிக்கும் படம்!

பிரசாந்த் 4 மொழிகளில் நடிக்கும் படம்!

செய்திகள் 26-Dec-2015 11:17 AM IST VRC கருத்துக்கள்

பிரசாந்த், ஆஸ்திரேலிய அழகி அமென்டா நடிக்கும் ‘சாஹசம்’ படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து பிரசாந்த் ஹிந்தியில் அக்‌ஷய் குமார் மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற ‘Special 26’ படத்தின் ரீ-மேக்கில் நடிக்கவிருக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 4 மொழிகளில் உருவாகவிருக்கிறது. தமிழிலும் இப்படத்திற்கு ‘இருபத்தியாறு’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இப்படத்தில் பிரசாந்துடன் சத்யராஜ், பிரகாஷ் ராஜ், நாசர், தம்பி ராமைய்யா, அபி சரவணன், ‘ரோபோ’ சங்கர், ஜெய் ஆனந்த், ’பெசன்ட் நகர்’ ரவி, தேவதர்ஷினி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கவுள்ளார்கள். முன்னணி கதாநாயகி ஒருவர் கதையின் நாயகியாக நடிக்க உள்ளார் என்றும் அவருக்கான தேர்வு நடந்து வருகிறது என்றும் கூறப்படுகிறாது. இவர்களுடன் கௌரவ வேடத்தில் தேவயானி, சிம்ரன் ஆகியோரும் நடிக்க உள்ளார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை ஆகிய நகரங்களில் நடைபெறவிருக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். எடிட்டிங்கை டான் மேக்ஸ் கவனிக்கிறார். இப்படத்தில் பிரசாந்துடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடவுள்ளார் ஹிந்தியில் பிரபல கதாநாயகியான ஜாக்குலின் பெர்னாண்டஸ். இப்படத்தின் திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கிறார் நடிகர் தியாகராஜன். இதன் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகவுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.0 ட்ரைலர்


;