பொங்கல் ரேஸில் குதிக்கும் ‘கெத்து’

பொங்கல் ரேஸில் குதிக்கும் ‘கெத்து’

செய்திகள் 26-Dec-2015 10:30 AM IST VRC கருத்துக்கள்

‘மான் கராத்தே’ புகழ் திருக்குமரன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், எமி ஜாக்சன் இணைந்து நடித்துள்ள ‘கெத்து’ படப் பாடல்கள் நேற்று வெளியானது. உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் நடித்த அத்தனை படங்களுக்கும் ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசை அமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் இப்படத்தை இம்மாதம் வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் பட வேலைகள் முடிய கால தாமதமானதால் பட வெளியீட்டை தள்ளிப் போட்டார்கள்! இப்போது படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து, புரொமோஷன் வேலைகளை துவங்கியுள்ளனர். இது சம்பந்தமாக நேற்று சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ‘கெத்து’ படத்தை பொங்கலன்று வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார் உதயநிதி ஸ்டாலின். ஏற்கெனவெ பாலாவின் ‘தாரை தப்பட்டை’, விஷாலின் ‘கதகளி’, ஜெயம் ரவியின் ‘மிருதன்’ ஆகிய படங்கள் பொங்கல் ரிலீஸ் என்று அறிவித்துள்ள நிலையில் இப்படங்களுடன் உதயநிதியின் ‘கெத்து’ம் களத்தில் குத்திக்க தயாராகி வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நிமிர் - நெஞ்சில் மாமழை வீடியோ பாடல்


;