‘கயல்’ டீமின் ரூபாய்!

‘கயல்’ டீமின் ரூபாய்!

செய்திகள் 24-Dec-2015 11:53 AM IST VRC கருத்துக்கள்

பிரபு சாலமன் இயக்கத்தில் ‘கயல்’ படத்தில் இணைந்து நடித்த சந்திரன், ஆனந்தி மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள். இப்படத்தை பிரபு சாலமன் தயாரிப்பில் ‘சாட்டை’ படத்தை இயக்கிய அன்பழகன் இயக்கி வருகிறார். முதலில் ‘ஃபைசல்’ என்ற டைட்டிலுடன் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்த இப்படத்திற்கு இப்போது ‘ரூபாய் என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். பிரபு சாலமனின் ‘காட் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு பிரபு சாலமனின் ஆஸ்தான இசை அமைப்பாளர் டி.இமான் தான் இசை அமைப்பாளர். பிரபு சாலமன், டி.இமான், ‘கயல்’ சந்திரன், ஆனந்தி முதலானோர் மீண்டும் இணைந்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷண் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்னொரு பக்கம் தனுஷ் நடிப்பில் பிரபு சாலமன் இயக்கி வரும் பெயரிடப்படாத படத்தின் இறுதிகட்ட வேலைகளும் பரபரப்பாக நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திட்டம் போட்டு திருடுற கூட்டம் - டீசர்


;