நயன்தாராவுக்கு அப்பாவாகும் தம்பி ராமையா!

நயன்தாராவுக்கு அப்பாவாகும் தம்பி ராமையா!

செய்திகள் 24-Dec-2015 10:59 AM IST VRC கருத்துக்கள்

‘மஞ்சப்பை’ படத்தை தயாரித்த இயக்குனர் சற்குணம் அடுத்து தனது ‘A Sarkunam Cinemaz’ நிறுவனம் சார்பில் நயன்தாரா நடிப்பில் ஒரு படத்தை தயாரிக்கிறார் என்ற தகவலை சமீபத்தில் நம் இணையதளத்தில் வெளியிட்டிருந்தோம்! சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற ‘மாயா’ படத்தை போன்று இப்படமும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ள படமாம்! இப்படத்தை சற்குணத்திடம் ‘களவாணி’ படம் முதல் ‘சண்டி வீரன்’ படம் வரை உதவி இயக்குனராக பணிபுரிந்து அனுபவம் பெற்ற தாஸ் ராமசாமி எழுதி இயக்குகிறார். இப்படம் ஹாரர் காமெடி ரக படமாக உருவாக இருக்கிறதாம். தற்போது இப்படத்திற்கான மற்ற நடிகர் நடிகைகளின் தேர்வு நடந்து வருகிறது. இப்படத்தில் நயன்தாராவின் அப்பா கேரக்டரில் நடிக்க தம்பி ரமையா தேர்வாகியுள்ளாராம். சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அஜித்தின் ‘வேதாளம்’ படத்தில் தம்பி ராமையா ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். அதைப் போல இப்படத்திலும் தம்பி ராமையாவுக்கு முக்கியமான வேடமாம். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிபிடிப்பு வருகிற ஃபிப்ரவரி மாதம் துவகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காஷ்மோரா - டிரைலர்


;