விஜய்யின் பொங்கல் பரிசு!

விஜய்யின் பொங்கல் பரிசு!

செய்திகள் 24-Dec-2015 10:35 AM IST VRC கருத்துக்கள்

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தெறி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் க்ளைமேக்ஸ் சண்டைக்காட்சியின் படப்பிடிப்பு பெரிய தொழிற்சாலை செட்டில் ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குனர் Kaloyan Vodenicharov இயக்கத்தில் படமாக்கப்பட்டது. இப்படத்தை வருகிற ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதால் படத்தின் புரொமோஷன் வேலைகளிலும் கவனம் செலுத்த துவங்கியுள்ளார்கள் படக்குழுவினர். சமீபத்தில் தான் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார்கள். இதனை தொடர்ந்து இப்படத்தின் டீஸரை பொங்கலையொட்டி வெளியிட திட்டமிட்டுள்ளார்கள் என்று கூறப்படுகிறது. ‘கலைப்புலி’ எஸ். தாணு தயாரிக்கும் படம் என்றால் மிகப் பிரம்மாண்டமான முறையில் அப்படங்களை விளம்பரப்படுத்துவது வழக்கம்! அந்த வகையில் ‘தெறி’ படத்தையும் மிகப் பிரம்மாண்டமான முறையில் அவர் விளம்பரப்படுத்த திட்டமிட்டுள்ளாராம்! நாளுக்கு நாள் ‘தெறி’ படத்தின் மீதான ரசிகர்களின் ஏதிர்பர்ப்பு எகிறி வரும் நிலையில் ரசிகர்கள் இப்படத்தின் டீஸரை பெரிதும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சைத்தான் புதிய - வீடியோ


;