‘டார்லிங்’ பட நாயகி நிக்கி கல்ராணி தற்போது பாபி சிம்ஹாவுடன் ‘கோ-2’, ஜீவாவுடன் ‘கவலை வேண்டாம்’, ராகவா லாரன்ஸுடன் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘கோ-2’வின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்துவிட்டதாம்! அரசியல் பின்னணியில் சொல்லப்படும் கதையாம் ‘கோ-2’. இதில் பத்திரிகை நிருபராக நடித்துள்ளாராம் நிக்கி! அதைப் போலவே ராகவா லாரன்ஸுடன் நடிக்கும் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்திலும் நிக்கிக்கு NEWS REPORTER கேரக்டராம்! ஆனால் இந்த இரண்டு கேரக்டரும் ஒன்றுக்கொன்று மாறுபட்டதாக அமைந்துள்ளதாம். ராகவா லாரன்ஸுடன் நடிக்கும் படத்தில் சுறுசுறுப்பான, சீரியஸான பத்திரிகை நிருபராக வரும் நிக்கி, எப்படி கெட்டவரான ராகவா லாரன்ஸின் காதல் வலையில் சிக்குகிறார் என்பது போன்ற வேடமாம்! சீரியஸான பத்திரிகை நிருபர் என்றாலும், இப்படத்தில் நிக்கிக்கு நிறைய காமெடி காட்சிகளும் உண்டாம்! இந்த படங்கள் தவிர, எழில் இயக்கத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்கும் படத்திலும் நடிக்கவிருக்கிறார் நிக்கி! ஆக, நிக்கி கைவசம் இப்போது நான்கு படங்கள் உள்ளன!
மாறுபட்ட கேரக்டர்களையும், கதைகளையும் தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களில் பாபி சிம்ஹாவும் ஒருவர்!...
ஏற்கெனவே வெளியாகி வெற்றிபெற்ற படங்களின் இரண்டாம் பாகங்களை எடுத்து வரும் சீஸன் இது. ரஜினிகாந்தின்...
சசிகுமார் நடித்து வரும் படங்கள் ‘நாடோடிகள்-2’, ‘கொம்பு வச்ச சிங்கமடா’, ‘கென்னடி கிளப்’ ஆகியவை! இந்த...