ஜேம்ஸ் வசந்தனின் மன்னிப்பு அறிக்கை!

ஜேம்ஸ் வசந்தனின் மன்னிப்பு அறிக்கை!

செய்திகள் 23-Dec-2015 12:34 PM IST VRC கருத்துக்கள்

சமீபத்தில் தொலைக்காட்சி நிருபர் ஒருவர் இசைஞானி இளையராஜாவிடம் கேட்ட ஒரு கேள்வியால் எழுந்த பிரச்சனையில் இளையராஜா குறித்து சில கருத்துக்களை தெரிவித்திருந்தார் இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன். அவர் கூறிய கருத்துக்கள் இளையராஜா ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் ஜேம்ஸ் வசந்தன் ஒரு மன்னிப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,
‘‘உலகெங்கும் உள்ள தமிழ் உள்ளங்களுக்கு…

சமீபத்தில் நான் ராஜா சார் பற்றிக் கூறிய கருத்துகள் மிகவும் பூதாகரமாக வெடித்து உள்ளது. இந்த சர்ச்சையை இத்துடன் முடித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும், ராஜா சாருடைய ரசிகர்கள் பலர் என்னுடைய இந்தக் கருத்தால் காயமுற்றதால் தான் இந்த மன்னிப்பு அறிக்கை. இதே நேரத்தில் சில விஷமிகள் என்னுடைய பெயரையும், படத்தையும் வைத்துக்கொண்டு அவதூறான கருத்துக்களையும், பரப்புரையும் செய்து வருகிறார்கள். அதனால் தான் நேற்றே என்னுடைய ட்விட்டர் தொடர்பையும் விட்டு விட்டேன். இந்த அறிக்கை மூலம் நான் என்னுடைய நிலையை தெளிவு செய்துக் கொள்ள விரும்புகிறேன். நான் என்னுடைய மனதில் உள்ளதை பேசுபவன். யார் மனதையும் புண்படுத்தவோ குறிப்பாக தமிழ் சமுதாயத்தை சேர்ந்தவர்களை புண்படுத்தவோ நினைக்க கூட செய்யாதவன். நடந்த சம்பவங்களை மறந்து முன்னேறுவோம்! நன்றி!!!’’ என்று குறிப்பிட்டுள்ளார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மரண மட்ட padal


;