இயக்குனர் சிகரத்துக்கு முதலாம் ஆண்டு அஞ்சலி!

இயக்குனர் சிகரத்துக்கு முதலாம் ஆண்டு அஞ்சலி!

செய்திகள் 23-Dec-2015 12:05 PM IST VRC கருத்துக்கள்

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த், ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் உட்பட பல பெரும் கலைஞர்களை தமிழ் சினிமாவுக்கு தந்தவர் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர். அத்துடன் மறக்க முடியாத பல திரைப்படங்களையும் தந்தவர்! இந்திய சினிமாவின் மிகச்சிறந்த இயக்குனர்களின் பட்டியலை எடுத்துக் கொண்டால் அதில் கே.பி.யின் பெயர் முதல் பத்து இடங்களுக்குள் இருக்கும் என்பது நிச்சயம்! சினிமாவில் பல ஆண்டு காலம் இயக்குனராக, தயாரிப்பாளராக, எழுத்தாளராக பணியாற்றிய கே.பி.யைத் தேடி வந்த விருதுகள் ஏராளம். அதில் இந்தியாவின் உயர் விருதுகளாக கருதப்படும் பத்மஸ்ரீ, டாக்டர் தாதா சாகேப் பால்கே விருதுகளும் அடங்கும். தமிழ் சினிமாவில் பெரும் சாதனை படைத்த இந்த மாபெரும் கலைஞர் இந்த உலகை விட்டுச் சென்று இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைகிறது. கடந்த வருடம் (2014) டிசம்பர் மாதம் 23-ஆம் தேதி காலமான கே.பாலச்சந்தரின் புகழ் என்றைக்குமே அழியாது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;