உதயநிதி ஸ்டாலின் தயாரித்து, நடித்து வரும் ‘கெத்து’ படத்தின் பாடல்கள் நாளை மறுநாள் (25-12-15) வெளியாகவிருக்கிறது. திருக்குமரன் இயக்கியுள்ள இப்படத்தை அடுத்த மாதம் (ஜனவரி) ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள். இந்த படத்தை தொடர்ந்து ஹிந்தி ‘ஜாலி எல்.எல்.பி.’ படத்தின் ரீ-மேக்கில் நடிக்கவிருக்கிறார் உதயநிதி. அஹமத் இயக்கும் இப்படம் முடிந்ததும் சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவும் முடிவு செய்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பாயும் புலி’யை இயக்கிய சுசீந்திரன் உதயநிதியை வைத்து முதன் முதலாக இயக்கவிருக்கும் இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது. ‘பாயும் புலி’யை தொடர்ந்து சுசீந்திரன் கதை, திரைக்கதை எழுதி தயரித்துள்ள ‘வில் அம்பு’ திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.
சென்ற வாரம் ‘டகால்டி’, ‘நாடோடிகள்-2’, ‘ உற்றான்’, ‘மாயநதி’ ஆகிய நான்கு நேரடித்தமிழ் படங்கள்...
மணிரத்னத்தின் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவன தயாரிப்பில் உருவாகி வரும் படம் ’வானம் கொட்டட்டும்’. இந்த...
மணிரத்னத்தின் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனம் தயாரிக்கும் படம் ’வானம் கொட்டட்டும்’. இந்த படத்தின் கதை,...