விஜய் ஆன்டனி நடிக்கும் ‘பிச்சைக்காரன் படத்தின் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது! ‘555’ படத்தை இயக்கிய சசி இயக்கும் இப்படம் ஜனவரி அல்லது ஃபிப்ரவரி மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இப்படத்தை தொடர்ந்து ‘சைத்தான்’ என்ற படத்தில் நடிக்கிறார் விஜய் ஆன்டனி! இப்படத்தை மே மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக விஜய் ஆண்டனியே சமீபத்தில் தெரிவித்துள்ளார். ‘பிச்சைக்காரன்’, ‘சைத்தான்’ படங்களை தொடர்ந்து விஜய் ஆன்டனி நடிக்கவிருக்கும் படம் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. விஜய் ஆன்டனி நடிப்பில் ‘நான்’ படத்தை இயக்கிய ஜீவா சங்கர் அடுத்து இயக்கும் படத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறார். தனது ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசமான தலைப்புகளை பிடிக்கும் விஜய் ஆன்டனி, ஜீவாசங்கர் இயக்கும் டத்திற்கு ‘எமன்’ என்று டைட்டில் வைத்துள்ளார். மரணம் குறித்த ஒரு மெசேஜை சொல்லும் கதையா இப்படம். இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது.
‘மீசையை குமுறுக்கு’, ‘நட்பே துணை’ ஆகிய படங்களை தொடந்து சுந்தர்.சி.யின் ‘ஆவ்னி மூவீஸ்’ நிறுவனம்...
தமிழ் சினிமாவில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நாஞ்சில் நளினி நேற்று சென்னையில் காலமானார்....
‘மீசையை முறுக்கு’, ‘நட்பே துணை’ ஆகிய படங்களை தொடந்து சுந்தர்.சி.யின் ‘ஆவ்னி மூவீஸ்’ நிறுவனம்...