அந்நியனைவிட ‘எந்திரன் 2’ திரைக்கதை மிகச்சிறப்பானது!

அந்நியனைவிட ‘எந்திரன் 2’ திரைக்கதை மிகச்சிறப்பானது!

செய்திகள் 23-Dec-2015 10:30 AM IST Chandru கருத்துக்கள்

இயக்குனர் ஷங்கர் படங்களின் வெற்றியில் அவரது கதாசிரியர்களுக்கும், வசனகர்த்தாக்களுக்கும் முக்கியப் பங்குண்டு. ஜென்டில்மேன், காதலன் படங்களில் எழுத்தாளர் பாலகுமாரன், இந்தியன் படத்திலிருந்து எந்திரன் வரை எழுத்தாளர் சுஜாதா, ‘ஐ’ படத்தில் இரட்டை எழுத்தாளர்கள் சுபா என தன் படங்களில் முக்கியமான எழுத்தாளர்களையும் தொடர்ந்து பங்குகொள்ள வைத்திருக்கிறார் இயக்குனர் ஷங்கர். அந்தவகையில், ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘2.0’வில் எழுத்தாளர் ஜெயமோகன் களமிறக்கப்பட்டிருக்கிறார். ஆனால், ஏற்கெனவே தன் பங்கு வேலைகள் அனைத்தையும் ‘எந்திரன் 2’வில் முடித்துவிட்டதாக அவரது அதிகாரபூர்வ இணையதளத்தில் எழுதியிருக்கிறார் ஜெயமோகன். மேலும் அவர் இப்படம் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களையும் அதில் பகிர்ந்திருக்கிறார்.

ஷங்கர் படங்களின் திரைக்கதையிலேயே மிகச்சிறப்பானதாக ஜெயமோகன் நினைப்பது ‘அந்நியன்’ படத்தின் திரைக்கதை அமைப்பைத்தானாம். அதைவிட ‘எந்திரன் 2’வின் திரைக்கதை சிறப்பாக அமைந்திருப்பதாக ஜெயமோகன் குறிப்பிட்டிருக்கிறார். அதோடு, சிட்டி கேரக்டரை இப்படத்தில் பெரிய அளவில் விரிவு படுத்தியிருக்கிறாராம் ஷங்கர். சிட்டியின் வேகம், குறும்பு, கோபம் என எல்லாமே இப்படத்தில் பலமடங்காக அதிகரிக்கப்பட்டிருக்கிறதாம். சிட்டியை எதிர்க்கும் ஒரு பவர்ஃபுல் கேரக்டருக்காகத்தான் முதலில் அர்னால்டிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாம். ஆனால், அவர் நடிப்பதில் சிக்கல் ஏற்படவே, தற்போது அந்த வலுவான வில்லன் கேரக்டரில் அக்ஷய்குமார் நடிப்பதாகவும் ஜெயமோகன் அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;