தேவையில்லாமல் சிவகார்த்திகேயனை இழுக்கிறார்கள்! - சிம்பு

தேவையில்லாமல் சிவகார்த்திகேயனை இழுக்கிறார்கள்! - சிம்பு

செய்திகள் 23-Dec-2015 10:17 AM IST Chandru கருத்துக்கள்

‘பீப் சாங்’ சர்ச்சையை தான் சட்டப்பூர்வமாக எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக சிம்பு அறிவித்திருந்தார். அதோடு, அந்தப் பாடலுக்கும் அனிருத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதையும் திட்டவட்டமாக சமீபத்திய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இந்த சர்ச்சை பாடலை இணையதளத்தில் பதிவேற்றியதற்கு மூல காரணமாக இருந்தவர் என நடிகர் சிவகார்த்திகேயனின் பெயரை சில இணையதளங்கள் குறிப்பிட்டிருந்தன. ஆனால், இந்த வதந்திக்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் நடிகர் சிம்பு.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘பீப் சாங் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட விஷயத்தில் சிவகார்த்திகேயனின் பங்கு எதுவும் இல்லை. வேண்டுமென்றே அவரது பெயரை இதில் சிலர் இழுத்துவிடுகின்றனர். வதந்திகளை நம்ப வேண்டாம்!’’ என்று குறிப்பிட்டிருக்கிறார் சிம்பு.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹீரோ டீஸர்


;