பாலிவுட் நாயகியை தெலுங்கில் களமிறக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்!

பாலிவுட் நாயகியை தெலுங்கில் களமிறக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்!

செய்திகள் 23-Dec-2015 10:10 AM IST Chandru கருத்துக்கள்

தமிழ், தெலுங்கில் மட்டுமின்றி ஹிந்தியிலும் தனது முத்திரையை பதித்து வருகிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். விஜய் நடிப்பில் வெளிவந்து சூப்பர்ஹிட்டான ‘துப்பாக்கி’ படத்தை, ஹிந்தியில் அக்ஷய்குமார் நடிக்க ‘ஹாலிடே’வாக ரீமேக்கினார் முருகதாஸ். தமிழ் அளவுக்கு இப்படம் வெற்றிபெறவில்லை என்றாலும், பாலிவுட் ரசிகர்களிடம் முருகதாஸிற்கு நல்ல அறிமுகம் கிடைத்தது.

இப்படத்தைத் தொடர்ந்து தற்போது சோனாக்ஷி சின்ஹாவை கதையின் நாயகியாக்கி ‘அகிரா’ என்ற பாலிவுட் படத்தை இயக்கி முடித்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். விரைவில் வெளியாகவிருக்கும் இப்படத்தைத் தொடர்ந்து மகேஷ் பாபுவை நாயகனாக்கி புதிய தெலுங்கு படம் ஒன்றை அவர் இயக்கவிருக்கிறார். இப்படத்திற்காக, ‘ஆஷிக் 2‘ படத்தின் நாயகியான ஷ்ரதா கபூரை பாலிவுட்டிலிருந்து அழைத்து வருகிறார்களாம். ஏற்கெனவே பாலிவுட்டிலிருந்து பல நாயகிகள் தென்னிந்திய சினிமாவில் களமிறங்கி வெற்றிபெற்றுள்ள நிலையில், ஷ்ரதா கபூரின் வருகையையும் மிகவும் எதிர்பார்த்துள்ளார்கள் தென்னிந்திய சினிமா ரசிகர்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;