‘வேலையில்லா பட்டதாரி’ வழியைப் பின்பற்றிய ‘கெத்து’!

‘வேலையில்லா பட்டதாரி’ வழியைப் பின்பற்றிய ‘கெத்து’!

செய்திகள் 23-Dec-2015 10:06 AM IST Chandru கருத்துக்கள்

தனுஷ், அனிருத் கூட்டணியில் வெளிவந்து ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற ‘வேலையில்லா பட்டதாரி’ ஆல்பம் பாணியிலேயே, உதயநிதி, ஹாரிஸின் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘கெத்து’ ஆல்பத்தின் டிராக் லிஸ்ட்டும் வெளியிடப்பட்டிருக்கிறது. வழக்கமாக டிராக் லிஸ்ட்டை முன்கூட்டியே வெளியிடும்போது, ஆல்பத்தின் பின்பக்க கவர் போஸ்டரை மட்டுமே வெளியிடுவார்கள். ஆனால், ‘விஐபி’யின் டிராக் லிஸ்ட்டை மோஷன் போஸ்டர் ஸ்டைலில் வீடியோவாக வெளியிட்டு அசத்தினார் தனுஷ். தற்போது உதயநிதியும் அதே பாணியில் தன்னுடைய ‘கெத்து’ ஆல்பத்தின் டிராக் லிஸ்ட் வீடியோவை வெளியிட்டிருக்கிறார். ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘இது கதிர்வேலன் காதல்’, ‘நண்பேன்டா’ படத்தைத் தொடர்ந்து உதயநிதியுடன் 4வது முறையாக இணைந்திருக்கும் ஹாரிஸ் ஜெயராஜின் கைவண்ணத்தில் உருவாகியிருக்கும் ‘கெத்து’ ஆல்பத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல்கள் விவரம் இதோ...

1. தில்லு முல்லு...
பாடியவர்கள் : நரேஷ் அய்யர், ரனினா ரெட்டி
பாடலாசிரியர்கள் : வி.பத்மாவதி, சீர்காழி சிற்பி, கானா வினோத்

2. தேன் காற்று...
பாடியவர்கள் : ஹரிச்சரண், ஷாஷா திருப்பதி
பாடலாசிரியர்: தாமரை

3. எவன்டா இவன்...
பாடியவர்கள் : எம்.சி.விக்கி, ஷர்மிளா
பாடலாசிரியர்: எம்.சி.விக்கி

4. அடியே அடியே...
பாடியவர்கள் : கார்த்திக், ஷாலினி
பாடலாசிரியர்: தாமரை

5. முட்ட பஜ்ஜி
பாடியவர்கள் : கானா வினோத், அந்தோணி தாஸ், மரணகானா விஜி, எமிஸா
பாடலாசிரியர்: கானா வினோத், ஜி.பிரபா

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எந்திரலோகத்து சுந்தரியே வீடியோ பாடல் - 2.0


;