விஷாலும், பாண்டிராஜும் முதன் முதலாக இணைந்துள்ள ‘கதகளி’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரவிருப்பதால படத்தின் வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது. ‘ஹிப் பாப் தமிழா’ ஆதி இசை அமைக்கும் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வருகிற 24-ஆம் தேதி வெளியியாகவிருக்கிறது. பெரும்பாலும் விஷால் நடிக்கிற படங்கள் தமிழில் வெளியாகிற அதே தினம் தெலுங்கிலும் வெளியாவது வழக்கம்! அதனால் ‘கதகளி’யை தெலுங்கில் ரிலீஸ் செய்வதற்கான வேலைகளும் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருவதாக விஷால் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தமிழ் ‘கதகளி’யின் ஆடியோ மற்றும் டிரைலர் 24-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிற நிலையில் தெலுங்கு ‘கதகளி’யின் டிரைலரை ஆந்திர ரசிகர்களுக்கு புத்தாண்டு பரிசாக வழங்கும் விதமாக ஜனவரி 1-ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளார் விஷால்!
விஷாலின் ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’யும், பாண்டிராஜின் ‘பாண்டிராஜ் புரொடக்ஷ’னும் இணைந்து தயாரித்து வரும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கேத்ரின் தெரெசா நடிக்கிறார். இப்படத்தை தமிழகம் முழுக்க ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் வெளியிடவிருக்கிறது.
‘தனுசு ராசி நேயர்களே’ படத்தை தொடர்ந்து ஹரீஷ் கல்யாண் ‘தாராள பிரபு’, மற்றும் பெயரிடப்படாத ஒரு படம்...
நடிகர்கள் ஜெயராம், தீலீப், சுரேஷ் கோபி, குஷ்பு, தேவயானி உள்ளிட்ட பல நடிகர்கள், நடிகைகளை வைத்து 25...
மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் படம் ‘FIR’. ‘சுஜாதா எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம்...