தெலுங்கில் உருவாகும் அதே நேரம், தமிழிலும் மகேஷ் பாபு நேரடியாக நடிக்கும் முதல் படம் ‘பிரம்மோற்சவம்’. இப்படத்தின் நாயகியாக நடிப்பவர் காஜல் அகர்வால். ஏற்கெனவே ‘பிசினஸ்மேன்’ படத்திலும் மகேஷ் பாபு, காஜல் அகர்வால் இருவரும் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். தமிழ் ரசிகர்களை குறிவைத்து ‘பிரம்மோற்சவம்’ உருவாக்கப்பட்டு வருவதால் சத்யராஜ், ரேவதி, சாயாஜி ஷின்டே, ஜெயசுதா என தமிழுக்கு பரிச்சயமானவர்களும் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். அதோடு ப்ரணிதா, சமந்தா ஆகியோர் சிறப்புத் தோற்றத்திலும் தோன்றவிருக்கிறார்கள்.
ஸ்ரீகாந்த் அதாலா இயக்கிவரும் இப்படத்தை பிவிபி சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஆந்திரா, தமிழக பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஊட்டியில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், அங்கு சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டதால், ஊட்டியை விட்டு கிளம்புவதாக காஜல் அகர்வால் தெரிவித்திருக்கிறார்.
சத்யசிவா இயக்கத்தில் கிருஷ்ணா கதையின் நாயகனாக நடித்த படம் ‘கழுகு’. இந்த அடம் வெற்றி பெற்றதை...
‘தனுசு ராசி நேயர்களே’ படத்தை தொடர்ந்து ஹரீஷ் கல்யாண் ‘தாராள பிரபு’, மற்றும் பெயரிடப்படாத ஒரு படம்...
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் உட்பட பலர் நடிக்கும் படம் ‘இந்தியன்-2’. இந்த படத்தின்...