தனது மனைவி கீதாஞ்சலி இயக்குனராக அறிமுகமாகியிருக்கும் ‘மாலை நேரத்து மயக்கம்’ படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியிருக்கிறார் இயக்குனர் செல்வராகவன். பாலகிருஷ்ண கோலா, வாமிகா கப்பி ஆகியோர் இருவரும் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் பார்வதி நாயர், கல்யாணி நடராஜன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். செல்வராகவன் ‘டச்’சில் உருவாகியிருக்கும் பாடல்கள், டிரைலர் ஆகியவற்றிற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதோடு இப்படம் சமீபத்தில் சென்சாரில் ‘ஏ’ சான்றிதழையும் பெற்றிருக்கிறது. ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இருக்கும் நுட்பமான உறவை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் படம் என்பதால் வயதுவந்தோருக்கான படமாக ‘மாலை நேரத்து மயக்கம்’ அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விரைவில் வெளியாகும் என்ற அறிவிப்புகளுடன் சமீபமாக இப்படத்தின் விளம்பர போஸ்டர்கள் தினசரிகளில் இடம் பெற்று வந்தது. இந்நிலையில் ‘மாலை நேரத்து மயக்கம்’ படத்தை புத்தாண்டு தினமான ஜனவரி 1ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறாராம் படத் தயாரிப்பாளரான கோலா பாஸ்கர்.
செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா கேசண்ட்ரா, நந்திதா ஸ்வேதா, ஆகியோர் முக்கிய...
செல்வராகவன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘NGK’. சூர்யா, சாய்பல்லவி, ரகுல்ப்ரீத் சிங்...
சென்ற வாரம் ‘நீயா-2’, ‘லிசா’, ‘ஓவியாவ விட்டா யாரு’ (சீனி), ‘ வண்ணக்கிளி பாரதி’ (வகிபா), ‘ஔடதம்’ ஆகிய...