‘அரண்மனை 2’ ரிலீஸ் திட்டத்தில் திடீர் மாற்றம்!

‘அரண்மனை 2’ ரிலீஸ் திட்டத்தில் திடீர் மாற்றம்!

செய்திகள் 22-Dec-2015 10:06 AM IST Chandru கருத்துக்கள்

சுந்தர்.சி முதல்முறையாக இயக்கிய பேய்ப்படம் ‘அரண்மனை’. சுந்தர்.சி, வினய், ஆன்ட்ரியா, ஹன்சிகா, சந்தானம் ஆகியோர் நடித்த இப்படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் தற்போது இயக்கிக் கொண்டிருக்கிறார் அவர். சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா, பூனம் பாஜ்வா, சூரி ஆகியோரின் பங்களிப்பில் உருவாகிவரும் ‘அரண்மனை 2’ படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள். இப்படத்தை வாங்கி வெளியிடும் ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் இன்னொரு ரிலீஸான ‘கதகளி’யும் இதே பொங்கலன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது

ஒரே நிறுவனத்தின் இரண்டு பெரிய படங்கள் ஒரே நேரத்தில் எப்படி ரிலீஸாகும் என அறிவிப்பு சமயத்திலேயே சந்தேகங்களும் கிளம்பின. ஆனால், இரண்டு படங்களின் மீதிருந்த நம்பிக்கையின் அடிப்படையில் துணிந்து இந்த முயற்சியில் இறங்கியிருந்தது இந்நிறுவனம்.

ஆனால், தற்போது ‘அரண்மனை 2’ படம் பொங்கலுக்கு ரிலீஸாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இப்படத்தின் சிஜி வேலைகளை அதிக சிரத்தையுடன் உருவாக்கி வருவதால் அதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாம். இதனால் ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி இப்படம் பொங்கலன்று ரிலீஸ் ஆகாதாம். அதற்குப் பதிலாக ஜனவரி 29ஆம் தேதி படம் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான குஷ்பு அறிவித்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பரமபதம் விளையாட்டு - ட்ரைலர்


;