‘பசங்க-2’ குறித்து சூர்யா, பாண்டிராஜ்!

‘பசங்க-2’ குறித்து சூர்யா, பாண்டிராஜ்!

செய்திகள் 21-Dec-2015 2:29 PM IST VRC கருத்துக்கள்

சூர்யாவின் ‘2டி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் தயாரித்துள்ள ‘பசங்க-2’ வருகிற 24-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகவிருக்கிறது. இதனையொட்டி இன்று சென்னயில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இப்பட்த்தை இயக்கிய பாண்டிராஜ் பேசும்போது,
‘‘எனது முதல் படமான ‘பசங்க’வில் வில்லேஜ் பசங்களின் வாழ்வியலை சொல்லியிருந்தேன். இப்படத்தில் சிட்டியில் வளரும் குழந்தைகளின் வாழ்வியலை சொல்லியிருக்கிறேன். சில வருடங்களுக்கு என் நண்பர் ஒருவர், ’என் பையன் ரொம்பவும் துரு துருவென்று இருக்கிறான். அவனோட சேட்டைகளை சமாளிக்கவே முடியவில்லை. அவனுடைய சேட்டைகளால் நான்கு ஸ்கூல், நான்கு வீடு வரை மாறிவிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது’ என்று வருத்தத்துடன் சொன்னார்! ஏன் என்று விசாரித்தபோது பல விஷயங்கள் கிடைத்தது. அந்த விஷயங்கள் தான் இந்த படத்தின் கரு. Attention Deficit Hyperactivity Disorder என்ற ஒருவித நோய் இருக்கிற குழ்ந்தைகள் தான் அப்படி இருப்பார்கள் என்பதை அறிந்தேன். இதை நோய் என்று சொல்ல முடியாது. அது ஒருவிதமான குணாதிசயம. இந்த மாதிரி இருக்கிற குழந்தைகளுக்கு நமக்கு இருக்கிற ‘ஐ.க்யூ’வை விட அதிகமான அளவில் ‘ஐ.க்யூ’ இருக்கும். இது மாதிரியான குழந்தைகள் நாம் நினைக்கும் பாதையில் பயணிக்கமாட்டார்கள். அவர்களை நாம் அவர்கள் பாதையில் தான் பயணிக்க விடவேண்டும்.

நம்முடைய காலத்தில் இருந்த குழந்தைகளுக்கு இருந்த மாதிரி ஃப்ரீடம் இப்போது சிட்டியில் வாழ்கிற குழந்தைகளுக்கு இல்லை. அவர்கள் ஒரு வீட்டுக்குள் அடைப்பட்டு கிடந்து வளர்கிறார்கள். இதனால் ஏற்படும் பாதிப்புகள் ஏராளம்! அப்படிப்பட்ட சிட்டி வாழ்க்கையில், அபார்ட்மென்ட் வாழ்க்கையில் வளர்கிற குழந்தைகளை நாம் எப்படி வளர்க்க வேண்டும், அவர்களுக்கு எப்படிப்பட்ட சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்ற அனைவருக்குமான கருத்துக்கள் இப்படத்தில் நிறைய உண்டு!

இதற்காக நிறைய படித்து, தெரிந்து, ஆராயச்சிகள் செய்து ஸ்கிரிப்ட்டை உருவாக்கினேன். ஆனால் இதை எப்படி படமாக எடுப்பது என்று யோசித்தபோது கொஞ்சம் பயம் வந்தது. டாகுமென்டரி படமாக எடுத்தால் நன்றாக இருக்காது. இது குழந்தைகள் படமாக, குழந்தைகளுக்கான படமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அதே நேரம் படத்தில் என்டர்டெயின்மென்ட் விஷயங்களும் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அதன்படி தான் இந்த கதைக்குள் சூர்யா சார், அமலா பால், பிந்து மாதவி முதலானோர் வந்தார்கள். நல்ல ஒரு விஷயத்துடன் சொல்லப்பட்ட இந்த படத்தில் அனைவருக்குமான பல விஷயங்கள் இருக்கிறது.

இந்த படம் வெற்றி பெறவேண்டும் என்பதை விட எல்லோரிடத்திலும் போய் சேரவேண்டும் என்பதே இந்த படம் சமப்ந்தப்பட்ட அனைவரது நோக்கமும். அந்த வகையில் இப்படத்தில் நிறைய நல்ல விஷயங்கள இருக்கிறது. கண்டிப்பாக குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் எல்லோருக்கும் பிடிக்கும் படமாக ‘பசங்க-2’ அமைந்துள்ளது’’ என்றார் பாண்டிராஜ்.
நடிகர் சூர்யா ‘பசங்க-2’ குறித்து பேசும்போது,

‘‘2டி’யின் தயாரிப்பில் முதலாவதாக ஆரம்பித்த படம் இது. ஆனால் இரண்டாவது படமாக ரிலீசாகவிருக்கிறது. முதலில் ‘36 வயதினிலே’ ரிலீசானது. அந்த படத்தை போன்று இந்த படமும் ‘2டி’ நிறுவனத்துக்கு பெருமை சேர்க்கும் படமாக, அடையாளம் தரும் படமாக அமைந்துள்ளது. இது போன்ற தரமான படங்களை தொடர்ந்து தயாரிக்க வேண்டும் என்பதே என் விருப்பம். குழந்தைகளை மையப்படுத்தி அதிகமாக படங்கள் வருவதில்ல. சமீபத்தில் ‘தங்க மீன்கள்’ வந்தது. அதற்கடுத்து ‘காக்கா முட்டை’ வந்தது. அந்த வரிசையில் இது குழந்தைகளை வைத்து குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட ஒரு படம்! குழந்தைகளுக்கான படம் என்றாலும் இதில் எல்லோரும் பார்த்து தெரிந்துகொள்ள வேண்டிய பல விஷயங்கள் இருக்கிறது. வருகிற 24-ஆம தேதி ‘பசங்க-2’ ரிலீசாகவிருக்கிறது. உங்கள் எல்லோருக்கும் இப்படம் பிடிக்கும் என்று நம்புகிறேன்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;