வாழ்த்துக்கள் தமன்னா, ஆன்ட்ரியா!

வாழ்த்துக்கள் தமன்னா, ஆன்ட்ரியா!

செய்திகள் 21-Dec-2015 11:36 AM IST VRC கருத்துக்கள்

2006-ல் ‘கேடி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தமன்னா. தமிழ் தவிர ஏராளமான ஹிந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார் தமன்னா! சமீபத்தில் வெளியாகி பெரும் சாதனை படைத்த ‘பாகுபலி’யில் இவரது நடிப்பையும், அழகையும் ரசிக்காதவர்களே இருக்க முடியாது என்று சொல்லலாம்! தற்போது ‘பாகுபலி’யின் இரண்டாம் பாகம், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘தர்மதுரை’ ஆகிய படங்களில் நடித்து வரும் தமன்னாவுக்கு இன்று பிறந்த நாள்! இவரைப் போலவே தமிழ் சினிமாவின் இன்னொரு பிரபலமான நடிகைக்கும் இன்று பிறந்த நாள்! அவர் ஆன்ட்ரியா! 2005-ல் ‘கண்டநாள் முதல்’ படத்தின் மூலம் அறிமுகமான ஆன்ட்ரியாவும், தமன்னாவும் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் சினிமாவில் அறிமுகமானவர்கள்! 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் பலதரப்பட்ட படங்களில், மாறுபட்ட பாத்திரங்களில் நடித்து, இன்னமும் தொடர்ந்து நடித்து கொண்டிருக்கும் இவ்விருவருக்கும் ‘டாப்10 சினிமா’வின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாளிகை டீஸர்


;