விஜய்சேதுபதி படத்தில் மீண்டும் நயன்தாரா?

விஜய்சேதுபதி படத்தில் மீண்டும் நயன்தாரா?

செய்திகள் 21-Dec-2015 11:05 AM IST Chandru கருத்துக்கள்

விஜய்சேதுபதியுடன் முதல்முறையாக நயன்தாரா இணைந்து நடித்த ‘நானும் ரௌடிதான்’ படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மீண்டும் இந்த கூட்டணி இணையவிருக்கிறதாம். ஆனால், இந்த முறை விஜய்சேதுபதிக்கு நாயகியாக அல்லாமல், நட்புக்காக ஒரேயொரு பாடலில் மட்டும் தலைகாட்டவிருக்கிறாராம் நயன்.

ஏற்கெனவே தென்மேற்கு பருவக்காற்று, இடம் பொருள் ஏவல் படங்களின் மூலம் இயக்குனர் சீனு ராமசாமியுடன் இணைந்த விஜய்சேபதி, தற்போது நடித்து வரும் ‘தர்மதுரை’ படத்தின் மூலம் அவருடன் மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறார். இப்படத்தில் தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ருடிஷ்டி டாங்கே ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். படத்தின் பப்ளிசிட்டிக்காகவும், விஜய்சேபதியுடனான நட்பிற்காகவும் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்து வரும் நயன்தாரா ஒரேயொரு பாடலுக்கு மட்டும் நடனமாடவிருக்கிறாராம். ஏற்கெனவே தனுஷிற்காக ‘எதிர்நீச்சல்’ பட பாடல் ஒன்றில் சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா நடனமாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;