‘பசங்க-2’ உடன் ‘கதகளி’ ஆடியோ, டிரைலர்!

‘பசங்க-2’ உடன் ‘கதகளி’ ஆடியோ, டிரைலர்!

செய்திகள் 19-Dec-2015 12:25 PM IST VRC கருத்துக்கள்

விஷாலும், பாண்டிராஜும் முதன் முதலாக இணைந்துள்ள படம் ‘கதகளி’. இப்படம் பொங்கல் ரிலீசாக வெளிவரவிருப்பதால படத்தின் வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது. ‘ஹிப் பாப் தமிழா’ ஆதி இசை அமைக்கும் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலரை வருகிற 24-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதே தினம் தான் பாண்டிராஜ் இயக்கியுள்ள மற்றொரு படமான ‘பசங்க-2’வும் ரிலீசாகவிருக்கிறது. பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் முதன் முலாக நடிக்கும் ‘கதகளி’யில் விஷாலுக்கு ஜோடியாக கேத்ரின் தெரெசா நடிக்கிறார். விஷாலின் ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’யும், பாண்டிராஜின் ‘பாண்டிராஜ் புரொடக்‌ஷ’னும் இணைந்து தயாரிக்கும் இப்படம் ஆக்ஷனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் தமிழக விநியோக உரிமையை ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் கைபற்றியுள்ளது என்றும், பொங்கலையொட்டி இந்நிறுவனம் ‘கதகளி’, சுந்தர்.சி.யின் ‘அரண்மனை-2’ என இரண்டு படங்களை ஒரே தினம் ரிலீஸ் செய்யவிருக்கிறது என்ற தகவலை ஏற்கெனவே நமது இணையதளத்தில் வெளிட்டிருந்தோம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆக்‌ஷன் ட்ரைலர்


;