‘மஞ்சபை’ இயக்குனருடன் ஆக்‌ஷன் களத்தில் ஆர்யா!

‘மஞ்சபை’ இயக்குனருடன் ஆக்‌ஷன் களத்தில் ஆர்யா!

செய்திகள் 19-Dec-2015 10:15 AM IST VRC கருத்துக்கள்

‘இஞ்சி இடுப்பழகி’ படத்தை தொடர்ந்து மலையாள ‘பெங்களுர் டேஸ்’ படத்தின் ரீ-மேக்கில் நடித்து வரும் ஆர்யா, அடுத்து ‘மஞ்சப்பை’ படத்தை இயக்கிய ராகவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். சமீபத்தில் ஆர்யா நடித்த பெரும்பாலான படங்கள் வணிக ரீதியாக கைகொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இருந்தாலும் ஆர்யாவுக்கென்று சில படங்கள் தொடர்ந்து அமைவதுண்டு! அடுத்து ‘மஞ்சபை’ ராகவ் இயக்கவிருக்கும் படம் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாம். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஃபிப்ரவரி மாதம் துவங்கவிருக்கிறது. இப்படத்திற்கன கதாநாயகி, மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞகளின் தேர்வு தற்போது நடந்து வருகிறது. இந்த படம் தவிர ‘மீகாமன்’ படத்தை இயக்கிய மகிழ்திருமேனி அடுத்து இயக்கும் படத்திலும் ஹீரோ ஆர்யா தான்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

துருவ நட்சத்திரம் - டீசர் 2


;