‘தாரை தப்பட்டை’ விழா ரத்தா?

‘தாரை தப்பட்டை’ விழா ரத்தா?

செய்திகள் 18-Dec-2015 2:54 PM IST VRC கருத்துக்கள்

‘பரதேசி’ படத்தை தொடர்ந்து பாலா இயக்கியுள்ள படம் ‘தாரை தப்பட்டை’. சசிகுமாரும், வரலட்சுமி சரத்குமாரும் இணைந்து நடித்துள்ள இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். இது இளையராஜாவின் 1000-வது படம் என்று கூறப்படுகிறது. இதனால் இப்படத்திற்கு இசை அமைத்துள்ள இளையராஜாவை கௌரவப்படுத்தும் விதமாக ‘தாரை தப்பட்டை’ பட ஆடியோ வெளியீட்டு விழாவை ஒரு பிரபல தனியார் டி.வி. சேனலுடன் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடத்த திட்டமிட்டிருந்தார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் தற்போது அந்த விழாவை கேன்சல் பண்ணிவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் தமிழகத்தில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிலிருந்து மக்கள் இன்னும் முழுமையாக விடுப்படாத நிலையில் இப்படியான ஒரு பிரம்மாண்ட விழா தேவையா என்று இயக்குனர் பாலாவும், இளையராஜாவும் நினைத்ததன் விளைவாம்! அதனால் பொங்கலையொட்டி அடுத்த மாதம் 14-ஆம் தேதி ரிலீசாகவிருக்கும் ‘தாரை தப்பட்டை’ படத்தின் பாடல்களை மிக விரைவில் எளிமையான ஒரு விழாவில் வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;