‘ஜாக்சன் துரை’ பாடல்கள் எப்போது?

‘ஜாக்சன் துரை’ பாடல்கள் எப்போது?

செய்திகள் 18-Dec-2015 12:52 PM IST VRC கருத்துக்கள்

‘பர்மா’ படத்தை இயக்கிய தரணிதரன் இயக்கி வரும் படம் ‘ஜாக்சன் துரை’. ‘நாய்கள் ஜாக்கிரதை’ எனும் வெற்றிப் படத்தை தொடர்ந்து சிபிராஜ் கதையின் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் சிபிராஜின் தந்தை சத்யராஜும் ஒரு முக்கிய வேடமேற்று நடித்துள்ளார். ‘ஸ்ரீ கிரீன் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் எம்.எஸ்.சரவணன் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சித்தார்த் விபின் இசை அமைக்கும் இப்படத்தின் பாடல்களை வருகிற 24-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளார்கள் என்று கூறப்படுகிறது. ஹாரர் ரக படமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாக பிந்து மாதவி நடித்துள்ளார். ‘நாய்கள் ஜாக்கிரதை’ பட வெற்றியை தொடர்ந்து சிபிராஜ் நடிக்கும் படம், சத்யராஜும், சிபிராஜும் இணைந்து நடிக்கும் படம் இது என்பதால் இப்படத்தின் மீது ரசிகர்களிடத்தில் ஒரு எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரங்கா டீஸர்


;