‘எனக்கு 20 உனக்கு 18’, ‘கேடி’ முதலான படங்களை இயக்கிய ஜோதி கிருஷ்ணா அடுத்து தெலுங்கில் ஒரு படத்தை இயக்குகிறார். ‘ஆக்சிஜன்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கோபிசந்த் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ரிஷி கன்னா நடிக்கவிருக்கிறார். இதுவரை காதல் படங்களை இயக்கிய ஜோதி கிருஷ்ணா இப்படத்தை ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படமாக இயக்கவிருக்கிறாரம். அஜித்தை வைத்து ‘ஆரம்பம்’, ‘என்னை அறிந்தால்’, ‘வேதாளம்’ ஆகிய படங்களை தயாரித்த ஏ.எம்.ரத்னத்தின் மகனான ஜோதி கிருஷ்ணா, இதுவரை அப்படங்களின் வேலைகளில் படு பிசியாக இயங்கி வந்ததால் படங்களை இயக்குவதில் ஒரு பிரேக் எடுத்துக் கொண்டாராம்! ஜோதி கிருஷ்ணா அடுத்து இயக்கவிருக்கும் ‘ஆக்சிஜன்’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் வாரத்தில் துவங்கவிருக்கிறது.
‘கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தை தொடர்ந்து அசோக் செல்வன் நடிப்பில் உருவான படம் ‘சில சம்யங்களில்’....
விமல் இப்போது ‘கன்னிராசி’, ‘களவாணி-2’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘கன்னிராசி’ படத்தின்...
‘கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தை தொடர்ந்து அசோக் செல்வன், லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் ‘ஹவுஸ்...