வெள்ள நிவாரணத்துக்கு ‘லைக்கா’ நிறுவனம் 5 கோடி உதவி!

வெள்ள நிவாரணத்துக்கு ‘லைக்கா’ நிறுவனம் 5 கோடி உதவி!

செய்திகள் 18-Dec-2015 11:13 AM IST VRC கருத்துக்கள்

‘கத்தி’ படத்தை தயாரித்த ‘லைக்கா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனத்தின் அடுத்த பிரம்மாணட தயாரிப்பு இயக்குனர் ஷங்கர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் இணையும் ‘எந்திரன்-2’ (2.0). இப்படத்தின் துவக்கவிழா சமீபத்தில் நடைபெற்றது. முதலில் இப்படத்தின் துவக்க விழாவை மிகப் பிரம்மாண்டமான முறையில் நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் தமிழகத்தில் எதிர்பாராமல் ஏற்பட்ட பெரும் மழை மற்றும் வெள்ளத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதால் பட விழாவை மிக எளிமையான முறையில் நடத்தினால் போதும் என்று முடிவு செய்தனர் ரஜினிகாந்த் உட்பட படக்குழுவினர். இதனை தொடர்ந்து சென்னையில் நேற்று முன் தினம் ‘எந்திரன்-2’ படத்துவக்க விழா நடைபெற்றது. இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மகளுக்கு உதவி செய்யும் விதமாக ‘லைக்கா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் தமிழக முதலமைச்சரின் வெள்ள நிவாரண நிதிக்காக 5 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளது. இதனை ‘லைக்கா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் நேற்று சென்னையில நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.

அத்துடன் மிகப் பிரம்மாண்டமான முறையில் உருவாகவிருக்கும் ‘எந்திரன்-2’ படத்தின் அதிகாரபூர்வமான தலைப்பு ‘2.0’ என்றும் அறிவித்தனர். இந்த படம் தவிர ‘டார்லிங்’ படத்தை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் ஒரு படத்தையும் ‘லைக்கா புரொடக்‌ஷன்ஸ்” நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படங்கள் தவிர தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் ‘கத்தி’ ரீ-மேக் படத்தின் தயாரிப்பிலும் இணையவிருக்கிறது ‘லைக்கா புரொடக்‌ஷன்ஸ்’.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;