‘கிருஷ்ணா டாக்கீஸ்’ என்ற பட நிறுவனம் சார்பில் மாதவன், மோகன் இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘நாலுபேரு நாலுவிதமா பேசுவாங்க’. இப்படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இப்படத்தின் ஆடியோவை இயக்குநர் மு.களஞ்சியம் வெளியிட, படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர். அதற்கு முன்னதாக இயக்குனர் மு.களஞ்சியம் பேசும்போது,
‘‘இந்தப் படவிழாவுக்கு என்னை அழைத்தபோது இது எந்த மாதிரி படமாக இருக்குமோ என்ற கவலையுடன் வந்தேன்! ஆனால் அண்ணன், தம்பி என குடும்பமாக இருந்து இப்படத்தை எடுத்திருக்கிறார்கள். தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் எல்லாம் குடும்பத்தில் உள்ளவர்களே நடித்து, தயாரித்து, இயக்கி திரைப்படங்களை எடுக்கிறார்கள். ஆனால் தமிழில் இப்படி யாரும் குடும்பமாக எடுப்பதில்லை. இப்படத்தின் பாடல்கள், காட்சிகள் ரசிக்கும்படி உள்ளன. யுகபாரதி கவனமாக பாடல்களை எழுதியுள்ளார்.
இன்று தமிழ் சினிமாகாரர்கள் தலைகுனிந்து நிற்கிறார்கள். அப்படி நிற்கும்படியான நிலை ஒரு சிலரால் உருவாகியுள்ளது. ஒரு சிலரால் அத்தனை தமிழ் சமுதாயமும் தலைகுனிந்து நிற்க வேண்டியிருக்கிறது. கண்ணதாசன், வைரமுத்து ஆகியோர் எல்லாம் ஆயிரக்கணக்கான தரமான பாடல்கள் எழுதியிருக்கிறர்கள். இப்படியா எழுதினார்கள்?’’ என்று சிம்பு, அனிருத் பாடல் குறித்து மறைமுகமாக கண்டனம் தெரிவித்த மு.களஞ்சியம் தொடர்ந்து பேசுகையில், ‘‘ தரமான படங்களை தமிழ் மக்கள் எப்போதும் ஏற்று கொண்டுள்ளார்கள். அந்த வரிசையில் இந்த ‘நாலு பேரு நாலுவிதமா பேசுவாங்க’ படமும் ரசிகர்களால் பேசப்படும் என்றார்.
‘ஜெயம்’ ராஜா, ‘ஜெயம்’ ரவியை போன்று இப்படத்தை இயக்கியிருக்கும் எல்.மாதவன், இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்திரஜித் ஆகியோர் அண்ணன், தம்பிகளாவர். இப்படத்தில் இந்திரஜித்துக்கு ஜோடியாக தேவிகா மாதவன் நடித்திருக்க, இவர்களுடன் சிங்கமுத்து, சாமிநாதன், நடன இயக்குனர் சிவசங்கர், நல்ல சம்பத், எஸ்.எஸ்.சிவா, சாய் சதீஷ், திண்டுக்கல் தனம், கலையரசன் ஆகியோரும் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான ‘சதுரன்’ படத்திற்கு இசை அமைத்த ஏ.கே.ரிஷால் சாய் தான் இந்த படத்திற்கும் இசை அமைத்துள்ளார். டி.எஸ்.வாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.
‘சினிமா ப்ளாட்ஃபார்ம்’ என்ற புதிய பட நிறுவனம் சார்பில் V.T. ரித்தீஷ்குமார் தயாரித்துள்ள படம் ‘நான்...
‘துருவங்கள் பதினாறு’, ‘நரகாசூரன்’ ஆகிய படங்களை இயக்கியவர் கார்த்திக் நரேன். இதில், அரவிந்த்சாமி,...
‘துருவங்கள் பதினாறு’ படத்தை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கியுள்ள ‘நரகாசூரன்’ படம் விரைவில்...