ஹாரிஸ் ஜெயராஜின் கிறிஸ்துமஸ் ட்ரீட்!

ஹாரிஸ் ஜெயராஜின் கிறிஸ்துமஸ் ட்ரீட்!

செய்திகள் 17-Dec-2015 11:45 AM IST VRC கருத்துக்கள்

திருக்குமரன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், எமி ஜாக்சன் ஜோடியாக நடித்துள்ள ‘கெத்து’ படப் பாடல்களை வருகிற 25-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை முதலில் இம்மாதம் 24-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் தமிழகத்தில் எதிர்பாராமல் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ள பாதிப்புகளால் படத்தின் இறுதி கட்ட பணிகளை திட்டமிட்டபடி முடிக்க முடியவில்லையாம். இதனால் ‘கெத்து’ பட ரிலீஸை தள்ளி வைத்தனர். இப்போது படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து விட்டது என்றும் படத்தை அடுத்த மாதம் வெளியிட திட்டமிட்டு, அதற்கான வேலைகள் மும்முரப்படுத்து உள்ளார்கள் என்றும் கூறப்படுகிது.
‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘இது கதிர்வேலன் காதல், ‘நண்பேன்டா’ படங்களின் மூலம் வரிசையாக உதயநிதிக்கு மூன்று ஹிட் ஆல்பங்களைக் கொடுத்த ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருக்கும் ‘கெத்து’ படப்பாடல்கள் கிருஸ்துமஸ் ‘ட்ரீட்’டாக வெளியாகவிருப்பதால் உதயநிதி ஸ்டாலினின் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காப்பான் - டீஸர்


;