ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த சூர்யா!

ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த சூர்யா!

செய்திகள் 17-Dec-2015 10:38 AM IST VRC கருத்துக்கள்

வருகிற 24-ஆம் தேதி ரிலிசாகவிருக்கிறது சூர்யாவின் ‘2டி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் தயாரிதுள்ள ‘பசங்க-2’. இந்த பட வெளியீடு சம்பந்தமாக சூர்யா தனது ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன் விவரம் வருமாறு:

அன்பு தம்பிகளுக்கு வணக்கம்.

சென்னை மற்றும் கடலூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உங்களில் பலர் நேரிடையாக களத்தில் நின்றும் வெளியில் இருந்தும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறீர்கள். உங்களின் மனிதநேய பணி சிறக்க என் வாழ்த்துக்கள்! அன்பின் வெளிப்பாடாக எனக்காக நீங்கள் பேனர்கள் வைப்பதையோ, போஸ்டர்கள் ஒட்டுவதையோ என்றைக்கும் நான் விரும்பியதில்லை. இதை நான் உங்களிடம் பலமுறை நேரிடையாக சொல்லியிருக்கிறேன். வரும் டிசம்பர் 24-ஆம் தேதி வெளியாக உள்ள ‘பசங்க-2’ படத்திற்கு தியேட்டர்களை அலங்கரிக்கும் வேலைகள் செய்யாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள். நிவாரண பணிகளை ஒருங்கிணைத்து செயல்பட தலைமை மன்ற அலுவலகத்தை தொடர்பு கொள்ளுங்கள். வீண் செலவுகளை தவிர்த்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண பணிகளில் ஈடுபடுங்கள்’’ என்று சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;