கடைசி நேர ட்விஸ்ட்... ‘எந்திரன் 2’வின் அதிகாரபூர்வ வில்லன்!

கடைசி நேர ட்விஸ்ட்... ‘எந்திரன் 2’வின் அதிகாரபூர்வ வில்லன்!

செய்திகள் 17-Dec-2015 9:38 AM IST Chandru கருத்துக்கள்

‘எந்திரன் 2’ பட அறிவிப்பு வெளியானதுமே இப்படத்தில் யார் வில்லனாக நடிக்கப் போகிறார் என்பதுதான் ரசிகர்களின் மில்லியன் டாலர் கேள்வியாக இருந்தது. ‘ஐ’ பட விழாவில் ஷங்கருக்கு கிடைத்த அர்னால்டின் அறிமுகத்தால், ‘எந்திரன் 2’வில் வில்லனாக நடிக்க அவரிடம் முதலில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. சம்பளம், கால்ஷீட் பிரச்சனை உள்ளிட்ட சிலபல காரணங்களால் அர்னால்ட் வில்லன் பட்டியலிலிருந்து விலகிக் கொண்டார். அதன் பிறகு அமீர்கானிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம். ஆனால், அதுவும் முழுமையடையவில்லை. பின்னர், விக்ரம், அஜித் ஆகியோரின் பெயர்கள் வில்லன் பட்டியலில் அடிபட்டது. ஆனால் எதுமே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் யாருமே எதிர்பார்க்காத வண்ணம் கடைசி நேர ட்விஸ்ட்டாக ‘எந்திரன் 2’வில் இணைந்திருக்கிறார் பாலிவுட் ஆக்ஷன் ஹீரோ அக்ஷய்குமார். தமிழில் உருவாகும் அதேநேரம் இப்படம் ஹிந்தியிலும் ‘ரோபோ 2’வாக உருவாகிறது. இதனால் பாலிவுட் ரசிகர்களை மனதில் வைத்து அக்ஷய்குமாரை படத்திற்கு ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம். முக்கிய வேடமொன்றில் அக்ஷய் நடிப்பதாக தயாரிப்புத்தரப்பு கூறினாலும், அந்த முக்கிய வேடம் ‘வில்லன்தான்’ என்கிறது படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம்.

தயாரிப்பு - லைகா புரோடக்ஷன்ஸ்
இயக்கம் - ஷங்கர்
வசனம் - ஜெயமோகன்
இசை - ஏ.ஆர்.ரஹ்மான்
ஒளிப்பதிவு - நீரவ் ஷா
VFX - ஸ்ரீனிவாஸ் மோகன்
சவுண்ட் டிசைனிங் - ரசூல் பூக்குட்டி,
கலை - முத்துராஜ்
சிறப்பு உடைகள் - மேரி.இ.வாட் / குவண்டம் எபக்ட்ஸ்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வெண்ணிலா கபட்டி குழு 2 ட்ரைலர்


;