எதையும் எதிர்கொள்ளத் தயார் - சிம்பு அதிரடி

எதையும் எதிர்கொள்ளத் தயார் - சிம்பு அதிரடி

செய்திகள் 16-Dec-2015 10:47 AM IST Chandru கருத்துக்கள்

தமிழகத்தையே புரட்டிப்போட்ட மழை, வெள்ளம் குறித்த பிரச்சனையை ஒரேயொரு பாடல் மூலம் மறக்கடிக்கச் செய்துவிட்டார் சிம்பு. ஆம்... அனிருத்தின் இசையமைப்பில் சிம்பு பாடியதாக கூறப்படும் சர்ச்சை பாடலான ‘பீப் சாங்’தான் சமூக வலைதளங்கில் தற்போதைய ஹாட் டாபிக். இப்பாடலுக்கெதிராக தமிழகம் முழுக்க பல்வேறு இடங்களில் உள்ள மகளிர் அமைப்புகள் கண்டனத்தை தெரிவித்தனர். அதோடு சிம்பு, அனிருத் படங்களை கிழித்தும், அவர்களுக்கெதிராக கோஷம் போட்டும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. நேற்று சிம்புவின் தி.நகர் வீட்டுமுன்பு இந்திய ஜனநாயக இளைஞர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அதோடு கோயம்புத்தூர் காவல் நிலையத்தில் சிம்பு மீது கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவருக்கு சம்மனும் அனுப்பப்பட்டுள்ளதாம்.

இந்நிலையில், இப்பிரச்சனை குறித்து தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்திருக்கிறார் சிம்பு. ‘‘எதையும் மறைக்கவும் இல்லை. நான் ஓடி ஒலியவும் இல்லை. அனைத்தையும் சட்டரீதியாக எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன். கடவுளை நம்புகிறேன். அவர் பார்த்துக் கொள்வார். உண்மையின்மேல் எனக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது!’’ என்று குறிப்பிட்டிருக்கிறார் சிம்பு.


உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;