இந்தியாவெங்கும் பாய்கிறது ‘ஈட்டி’

இந்தியாவெங்கும் பாய்கிறது ‘ஈட்டி’

செய்திகள் 16-Dec-2015 10:36 AM IST VRC கருத்துக்கள்

கடந்த 11-ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘ஈட்டி’. அதர்வா, ஸ்ரீதிவ்யா முக்கிய கேரக்டர்களில் நடத்துள்ள இப்படத்தை வெற்றிமாறனின் உதவியாளர் ரவி அரசு இயக்கியிருக்கிறார். தமிழில் இப்படம் வெற்றி பெற்றுள்ளதால தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் இப்படம் ரீ-மேக்காகவிருப்பதாக இப்படத்தை தயாரித்த ‘குளோபல் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. அதில் ‘ஈட்டி’யின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்க ஷாஹித் கபூரும், தெலுங்கில் நிதினும், கன்னடத்தில் யாஷும் விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள் என்றும், இது சம்பந்தமாக அவர்களுடன் பேச்சு வாரத்தைகள் நடந்து வருவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இதில் ‘ஈட்டியின் தெலுங்கு ரீ-மேக்கை தமிழில் தயாரித்த மைக்கேல் ராயப்பனே தயாரிக்க இருக்கிறார் என்றும் அதனை தமிழில் இயக்கிய ரவி அரசுவே இயக்க இருக்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் ‘ஈட்டி’ படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஐங்கரன் ட்ரைலர்


;