போட்டியில்லாததால் 400ஐத் தொடும் தனுஷின் ‘தங்கமகன்’

போட்டியில்லாததால் 400ஐத் தொடும் தனுஷின் ‘தங்கமகன்’

செய்திகள் 16-Dec-2015 10:01 AM IST Chandru கருத்துக்கள்

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் குறைந்தது மூன்று படங்களாவது நேரடியாக தமிழில் ரிலீஸாகும். முன்னணி நடிகர்களின் படங்கள் என்றால் இரண்டு படங்களாவது மோதிக்கொள்ளும். சமீபத்திய மழை, வெள்ளம் காரணமாக பெரிய படங்கள் எதுவும் ரிலீஸாகமலிருந்தது. இந்நிலையில் தமிழகம் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியிருப்பதால், தியேட்டர்களில் ரசிகர்களின் எண்ணிக்கையும் உயரத் தொடங்கியுள்ளது. இந்த ஆரோக்கியமான சூழ்நிலையில் தனுஷின் ‘தங்கமகன்’ எந்தவித பெரிய போட்டியின்றிலும் தமிழகத்தில் வெளியாவதால் கிட்டத்தட்ட அப்படத்திற்கு 400க்கும் மேற்பட்ட திரையரங்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாம். தனுஷ் கேரியரைப் பொறுத்தவரை ‘தங்கமகன்’ படமே அதிக எண்ணிக்கையில் தமிழகத்தில் வெளியாகவிருக்கும் படமாக அமைந்துள்ளது.

வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘தங்கமகன்’ படத்தில் எமிஜாக்ஷன், சமந்தா நாயகிகளாக நடித்துள்ளானர். காமெடி ஏரியாவை சதீஷ் கவனிக்கிறார். அனிருத்தின் இசையில் பாடல்கள் பெரிய ஹிட்டடிக்கவில்லை என்றாலும், படத்தோடு பார்க்கும்போது வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கை கொண்டுள்ளது படக்குழு. ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் வெற்றிக்கூட்டணியில் ‘தங்கமகன்’ உருவாகியிருப்பதால் இப்படத்திற்கும் ரசிகர்களிடம் நல்ல எதிர்பார்ப்புள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;