வெள்ள நிவாரண நிதிக்கு நடிகர் அக்‌ஷய் குமார் 1 கோடி உதவி!

வெள்ள நிவாரண நிதிக்கு நடிகர் அக்‌ஷய் குமார் 1 கோடி உதவி!

செய்திகள் 15-Dec-2015 2:27 PM IST VRC கருத்துக்கள்

சென்னையில் சமீபத்தில் பெய்த கனமழையால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு பல நல்லுள்ளங்கள் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். தற்போது பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் சென்னை மக்களுக்காக ஒரு கோடி ரூபாயை நிவாரன நிதியாக வழங்கியுள்ளார். சென்னை மக்களின் நிலைமையை கண்டு அவர்களுக்கு உதவ வேண்டும் என்று எண்ணிய அக்‌ஷய் குமார், இயக்குனர் ப்ரிய தர்சனை தொடர்பு கொள்கையில் அவர் சுஹாசினி மணிரத்னத்தை தொடர்பு கொள்ள கூறியுள்ளார். சுஹாசினி மணிரத்னம் வழிகாட்டுதலில் ஜெய்ந்த்ரா நிர்வாக அறங்காவலரின் பூமிகா அறக்கட்டளைக்கு 1 கோடி ரூபாய்க்கான காசோலையை நடிகர் அக்‌ஷய் குமார் அளித்துள்ளார். பூமிகா அறக்கட்டளை தற்போது சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.0 ட்ரைலர்


;